Tiruvasakam1.32
Manikkavasakar 8th century Tamil Poet.
Translation by G.U.Pope  1820-1908 and Dr. Kausalya Hart
Prepared by Veeraswamy Krishnaraj
32. பிரார்த்தனைப் பத்து  (திருப்பெருந்துறையில் அருளியது
- அறுசீர்க் கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்)  Source Madurai Project
Hymn XXXII- praththanai pathu  THE SUPPLICATION. Shaivam.org   English Translation: G.U.Pope
485. கலந்து நின்னடி யாரோ டன்று வாளா களித்திருந்தேன்
புலர்ந்து போன காலங்கள் புகுந்துநின்ற திடர்பின்னாள்
உலர்ந்து போனேன் உடையானே உலவா இன்பச் சுடர்காண்பான்
அலர்ந்து போனேன் அருள்செய்யாய் ஆர்வங் கூர அடியேற்கே. 4
I. Alternations of feeling.
Mingling with Thy true saints, that day in speechless joy I stood;
Next day, with dawning daylight trouble came, and there abode.
My soul grows old. Master! to seek the gleam of fadeless bliss
Wand'ring I went. In grace to me, Thy slave, let loye abound! (4)
486. அடியார் சிலருன் அருள்பெற்றார் ஆர்வங் கூர யான் அவமே
முடையார் பிணத்தின் முடிவின்றி முனிவால் அடியேன் மூக்கின்றேன்
கடியேனுடைய கடுவினையைக் களைந்துன் கருணைக் கடல்பொங்க
உடையாய் அடியேன் உள்ளத்தே ஓவா துருக அருளாயே. 8
II. Impatience. 
Some of Thy saints have gained through plenteous love Thy grace. Grown lod, 
All vain my griefs, - of this vile corpse I see no end. 
Remove from sinful me my deeds of sin; let mercy's sea o'erflow! 
O Master, to Thy slave give ceaseless soul-subduing grace! (8)
487. அருளா ரமுதப் பெருங்கடல்வாய் அடியா ரெல்லாம் புக்கழுந்த
இருளா ராக்கை யிதுபொறுத்தே எய்த்தேன் கண்டாய் எம்மானே
மருளார் மனத்தோர் உன்மத்தன் வருவாய் என்றிங் கெனைக்கண்டார்
வெருளா வண்ணம் மெய்யன்பை உடையாய் பெறநான் வேண்டும்மே. 12
III. Fortitude-strong in love-needed. 
Deep in the vast Ambrosial sea of grace Thy perfect saints 
Have sunk. Lo, Lord, I wearied bear this frame with darkness filled! 
Men see, and cry, 'A madman, one of 'wildered mind is here.' 
Master, that I may fearless live, true live I NEEDS must gain! (12)
488. வேண்டும் வேண்டும் மெய்யடியா ருள்ளே விரும்பி எனை அருளால்
ஆண்டாய் அடியேன் இடர்களைந்த அமுதே அருமா மணிமுத்தே
தூண்டா விளக்கின் சுடரனையாய் தொண்டனேற்கும் உண்டாங்கொல்
வேண்டா தொன்றும் வேண்டாதுமிக்க அன்பே மேவுதலே. 16
IV. Craving for consummate bliss 
I NEED!; I NEED! Midst Thy true faithful ones, in grace desiring me, 
Thou mad'st me Thine, my grief's expell'd, - Ambrosia! precious peerless Gem, 
Like gleam of quenchless lamp! And I, Thy servant too, shall I 
Reach Thee, and ne'er again know NEED? Thou all-abounding Love! (16)
489. மேவும் உன்றன் அடியாருள் விரும்பி யானும் மெய்ம்மையே
காவி சேருங் கயற்கண்ணான் பங்கா உன்றன் கருணையினால்
பாவியேற்கும் உண்டாமோ பரமா னந்தப் பழங்கடல்சேர்ந்
தாவி யாக்கை யானென்தன் றியாது மின்றி அறுதலே. 20
V. Shall I get free from Self? 
Thou Partner of the bright-eyed maid! To dwell among Thy saints, 
Desiring Thee in truth, shall it be giv'n to sinful me 
By Thine own grace, gaining the ancient sea of bliss superne
To rest, in soul and body freed from thought of 'I' and 'mine'? (20)
490. அறவே பெற்றார் நின்னன்பர் அந்தமின்றி அகநெகவும்
புறமே கிடந்து புலைநாயேன் புலம்பு கின்றேன் உடையானே
பெறவே வேண்டும் மெய்யன்பு பேரா ஒழியாய் பிரிவில்லா
மறவா நினையா அளவில்லா மாளா இன்ப மாகடலே. 24
VI. Longing desire of the Infinite Bliss 
Thy loving ones have gained 'cessation' absolute; but here 
My spirit ever melts, outside I lie,- base dog, and mourn
O Master mine, I would attain true love's vast sea of bliss, 
That cahnge, surcease, oblivion, sev'rance, thought, bound, death knows not! (24)
491. கடலே அனைய ஆனந்தக் கண்டா ரெல்லாங் கவர்ந்துண்ண
இடரே பெருக்கி ஏசற்றிங் கிருத்த லழகோ அடிநாயேன்
உடையாய் நீயே அருளிதியென் றுணர்த்தா தொழிந்தே கழிந்தொழிந்தேன்
சுடரார் அருளால் இருள்நீங்கச் சோதி இனித்தான் துணியாயே. 28
VII. Cut short Thy work! 
They've seen the sea-like bliss, have seized it, and enjoy! Is't meet, 
That I, low dog, with added pains and pining sore should bide? 
Master, do Thou Thyself give grace, I pray! I faint! I fail! 
Cut short Thy work! O light! let darkness flee before Thy mercy's beam! (28)
492. துணியா உருகா அருள்பெருகத் தோன்றும் தொண்டரிடைப்புகுந்து
திணியார் மூங்கிற் சிந்தையேன் நின்று தேய்நின்றேன்
அணியா ரடியா ருனக்குள்ள அன்புந் தாராய் அருளளியத்
தணியா தொல்லை வந்தருளித் தளிர்ப்பொற் பாதந் தாராயே. 32

8. I want to join the devotees

who received your grace, their hearts melting with devotion.

My heart is hard as bamboo

and I have become weak saying, “Shiva!” always.

Give me the same love that your beloved devotees have for you,

and the grace that makes me continuously

worship your precious golden feet. [492]  Dr. Kausalya Heart

VIII. Come quickly 
Enter'd amongst Thine own, to whom true melting grace abounds, 
I stand with soul like tough bambasa stem, and wear away. 
O Civan, grant the love Thy crowned servants bear to Thee! 
O swiftly come, and give to me Thy tender beauteous Foot! (32)  G.U. Pope
தாரா அருளொன் றின்றியே தந்தாய் என்றுன் தமரெல்லாம்
ஆரா நின்றார் அடியேனும் அயலார் போல அயர்வேனோ
சீரார் அருளாற் சிந்தனையைத் திருத்தி ஆண்ட சிவலோகா
பேரா னந்தம் பேராமை வைக்க வேண்டும் பெருமானே. 493
IX. Was I not made Thine own? 
Thine own stood round, and all declar'd: 'No grace withheld, all grace
Is given,' - and I, Thy servant, shall I mourn as aliens wont? 
Thou King of Civa-world, by glorious grace didst change my thought, 
And make me Thine,- I pray Thee, Lord, place me in changeless bliss! (36)
மானோர் பங்கா வந்திப்பார் மதுரக் கனியே மனநெகா
நானோர் தோளாச் சுரையொத்தால் நம்பி இத்தால் வாழ்ந்தாயே
ஊனே புகுந்த உனையுணர்ந்த உருகிப் பெருகும் உள்ளத்தைக்
கோனே அருளுங் காலந்தான் கொடியேற் கென்றோ கூடிவதே. 494
X. Is aught gained by delay? 
Thou Partner sole of the Gazelle! Sweet fruit to them that worship Thee! 
Teacher! If I am like an unbor'd gourd, doth thus Thy glory live? 
O King, when comes the time that Thou wilt grant in grace to me 
A soul that melts and swells in knowing Thee, Who cam'st in flesh? (40)  G.U.Pope
10. O sweet fruit who gave half of your body to your wife.
Do not make me suffer.
If I live like a suraikkaay without a hole,
is that a good thing for you to do to your devotee?
O king, my heart melts yearning to understand you.
When will you enter my heart and give your grace to this sinner?
I want to join you. [494]  Dr. Kausalya Hart
கூடிக்கூடி உன்னடியார் குளிப்பார் சிரிப்பார் களிப்பாரா
வாடி வாடி வழியற்றேன் வற்றல் மரம்போல் நிற்பேனோ
ஊடி ஊடி உநடியாயொடு கலந்துள் ளுருகிப் பெருகிநெக்கு
ஆடிஆடி ஆனந்தம் அதுவே யாக அருள்கலந்தே. 495
XI. Must I langusih here? 
In concert joining shall Thy saints, there bending smile and joy? 
O Master, drooping, all forlorn, like withered tree, must I 
Stand sullen while they mingle, melt, souls swelling, lost in bliss 
In rhythmic dance? Grant bliss of sweet communion with Thy grace! (44)