Tiruvasakam1.28
Manikkavasakar
Prepared by Veeraswamy Krishnaraj
28. வாழாப்பத்து - முத்தி உபாயம் (திருப்பெருந்துறையில் அருளியது -
அறு சீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்)  Source: Madurai Project
    

Hymn XXVIII- vaazhap pathu NO JOY IN LIFE  Source Shaivam.org.  G.U.Pope

448. பாரொடு விண்ணாய்ப் பரந்த எம்பரனே பற்றுநான் மற்றிலேன் கண்டாய்
சீரொடு பொலிவாய் சிவபுரத்தரசே திருப்பெருந்துறையுறை சிவனே
ஆரொடு நோகேன் ஆர்க்கெடுத் துரைக்கேன் ஆண்டநீ அருளிலை யானால்
வார்கடல் உலகில் வாழ்கிலேன் கண்டாய் வருகஎன்றருள் புரியாயே. 4

I. Longing for release. 

Transcendent One, extending through both earth and heaven, 

THOU SEE'ST TO NONE BUT THEE I CLING!- 
O Civa-puram's King! In glorious beauty bright, 

Civan, in holy Perun-turrai's shrine, 
Who dwell'st! To whom make I my plaint, whom blame, if Thou 

Who mad'st me Thine deny Thy grace? 
THOU SEE'ST NO JOY have I upon this sea-girt earth; 

BE GRACIOUS, BID ME COME TO THEE! (4)

449. வம்பனேன் தன்னை ஆண்டமா மணியே மற்றுநான் பற்றிலேன் கண்டாய்
உம்பரும் அறியா ஒருவனே இருவர்க் குணர்விறந்துலக மூடுருவுஞ்
செம்பெருமானே சிவபுரத்தரசே திருப்பெருந்துறையுறை சிவனே
எம்பெருமானே எனனையாள்வானே என்னைநீ கூவிக் கொண்டருளே. 8

II. Me, worthless one, Thou mad'st in grace Thine own, great Gem,- 

THOU SEE'ST TO NONE BUT THEE I CLING!- 
Whose form unique even those in yonder world know not, 

past thought of both,- all piercing power
Thou art, the glorious Lord! O Civa-puram's King! 

Civan, in Perun-turrai's shrine 
Who dwell'st our mighty Lord, Thou Ruler of my soul, 

BE GRACIOUS, BID ME COME TO THEE! (8)

450. பாடிமால் புகழும் பாதமே அல்லால் பற்றுநான் மற்றிலேன் கண்டாய்
தேடிநீ ஆண்டாய் சிவபுரத்தரசே திருப்பெருந்துறையுறை சிவனே
ஊடுவ துனனோ டுவப்பதும் உன்னை உணர்த்துவ துனக்கெனக்குறுதி
வாடினேன் இங்கு வாழ்கிலேன் கண்டாய் வருகஎன்றருள் புரியாயே. 12

III. That foot alone I seek that Mal in songs extolled; 

THOU SEE'ST TO NONE BUT THEE I CLING!- 
Thou sought'st me, mad'st me Thine, O Civa-puram's King! 

Civan, in Perun-turrai's shrine
Who dwell'st. Though I complain, in Thee my soul delights; 

to gain anew Thy love my thought; 
Thou see'st my heart is faint, I have no joy in life; 

BE GRACIOUS, BID ME COME TO THEE! (12)

451. வல்லைவாளரக்கர் புரமெரித்தானே மற்றுநான் பற்றிலேன் கண்டாய்
தில்லைவாழ் கூத்தா சிவபுரத்தரசே திருப்பெருந்துறையுறை சிவனே
எல்லைமூவுலகும் உருவியன் றிருவர் காணும்நாள் ஆகியீ றின்மை
வல்லையாய் வளர்ந்தாய் வாழ்கிலேன் கண்டாய் வருக என்றருள் புரியாயே. 16

IV. Thou Who the gleaming rebel-town didst swift consume, (BY FIRE)

THOU SEE'ST TO NONE BUT THEE I CLING!- 
Dancer, Who bid'st in Tillai, Civa-puram's King! 

Civan, in Perun-turrai's shrine 
Who dwell'st, the three worlds' bounds that day the twain pass'd through, 

and saw nor first nor last of Thee, 
In might so didst Thou rise! Thou see'st I joy not here;- 

BE GRACIOUS, BID ME COME TO THEE! (16)

452. பண்ணினேர் மொழியாள் பங்கநீயல்லால் பற்றுநான் மற்றிலேன் கண்டாய்
திண்ணமே ஆண்டாய் சிவபுரத்தரசே திருப்பெருந்துறையுறை சிவனே
எண்ணமே உடல்வாய் மூக்கொடு செவிகண் என்றினை நின்கணே வைத்து
மண்ணின்மேல் அடியேன் வாழ்கிலேன் கண்டாய் வருகஎன்றருள் புரியாயே. 20

V. Absolute self-surrender. 
Partner of Her whose words are sweetest melody! 

THOU SEE'ST TO NONE BUT THEE I CLING!- 
Surely Thou mad'st me Thine, O Civa-puram's King! 

Civan, in holy Perun-turrai's shrine 
Who dwell'st,- the whole: my body, mouth, nose, ears, and eyes:- 

all these in Thy control I place
THOU SEE'ST THY SERVANT HATH NO JOYS UPON THIS EARTH;- 

BE GRACIOUS, BID ME COME TO THEE! (20)

453. பஞ்சின்மெல்லடியான் பங்கநீ யல்லால் பற்றுநான் மற்றிலேன் கண்டாய்
செஞ்செவே ஆண்டாய் சிவபுரத்தரசே திருப்பெருந்துறையுறை சிவனே
அஞ்சினேன் நாயேன் ஆண்டுநீ அளித்த அருளினை மருளினால் மறந்த
வஞ்சனேன் இங்கு வாழ்கிலேன் கண்டாய் வருக என்றருள் புரியாயே. 24

VI. The sense's power. 

Partner of Her with footfall downy soft,   (Cottony-soft foot)

THOU SEE'ST TO NONE BUT THEE I CLING!- 
Thou mad'st me wholly Thine, O Civa-puram's King! 

Civan, in Perun-turrai's shrine 
Who dwell'st,- me trembling cur, Thou mad'st Thine own; that grace 

through senses' perturbation I forgot; 
THOU SEE'ST THAT IN DECEPTION LOST, I JOY NOT HERE;- 

BE GRACIOUS, BID ME COME TO THEE! (24)

454. பரிதிவாழ் ஒளியாய் பாதமே யல்லால் பற்றுநான் மற்றிலேன் கண்டாய்
திருவுயர்கோலச் சிவபுரத்தரசே திருப்பெருந்துறையுறை சிவனே
கருணையே நோக்கிக் கசிந்துளம் உருகிக் கலந்துநான் வாழுமா றறியா
மருளனேன் உலகில் வாழ்கிலேன் கண்டாய் வருக என்றருள் புரியாயே. 28

VII. Thou Light, that shin'st a Sun through all the spheres, 

THOU SEE'ST TO NONE BUT THEE I CLING!- 
Sacred, supremely glorious Civa-Puram's King! 

Civan, in Perun-turrai's shrine 
Who dwell'st, Thee I see; - my melting soul dissolves

'wilder'd I know not any way in life to joy. 
THOU SEE'ST I, FOLLY'S CHILD, CAN IN THIS LIFE PARTAKE NO JOY, 

BE GRACIOUS, BID ME COME TO THEE! (28)

455. பந்தனை விரலாள் பங்கநீ யல்லால் பற்றுநான் மற்றிலேன் கண்டாய்
செந்தழல் போல்வாய் சிவபுரத்தரசே திருப்பெருந்துறையுறை சிவனே
அந்திமில் அமுதமே அருள்பெரும் பொருளே ஆரமுதே அடியேனை
வந்துய்ய ஆண்டாய் வாழ்கிலேன் கண்டாய் வருக என்றருள் புரியாயே. 32

VIII. Partner of Her whose fingers jewels rare adorn, 

THOU SEE'ST TO NONE BUT THEE I CLING!- 
Thou art like ruddy flame, O Civa-puram's King! 

Civan, in Perun-turrai's shrine 
Who dwell'st,- endless Ambrosia,- Essence rare and great,- 

Ambrosia rare,- Thy servant Thou didst save, 
And mad'st me Thine, IN LIFE I CANNOT JOY THOU SEE'ST; 

BE GRACIOUS, BID ME COME TO THEE! (32)

456.  பாவநாசாவுன் பாதமே யல்லால் பற்றுநான் மற்றிலேன் கண்டாய்
தேவர் தந்தேவே சிவபுரத்தரசே திருப்பெருந்துறையுறை சிவனே
மூவுல குருவ இருவர்கீழ் மேலாய் முழங்கழலாய் நிமிர்ந்தானே
மாவுரி யானே வாழ்கிலேன் கண்டாய் வருக என்றருள் புரியாயே. 36

IX. Thou'rt sin's Destroyer, save Thy healing foot alone, 

THOU SEE'ST TO NOUGHT BESIDE I CLING!- 
God of all gods, O Civa-puram's King! Civan, 

in sacred Perun-turrai's shrine Who dwell'st 
Through the three worlds passing, above below the twain, 

as roaring flame Thou didst uplift Thy form. 
Lord of the bull! THOU SEE'ST IN LIFE I CANNOT JOY; 

BE GRACIOUS, BID ME COME TO THEE! (36)

457. பழுதில்சொல் புகழால் பங்கநீயல்லால் பற்றுநான் மற்றிலேன் கண்டாய்
செழுமதி அணிந்தாய் சிவபுரத்தரசே திருப்பெருந்துறையுறைச் சிவனே
தொழுவனோ பிறரைத் துதிப்பனோ எனக்கோர் துணையென நினைவனோ சொல்லாய்
மழவிடையானே வாழ்கிலேன் கண்டாய் வருக என்றருள் புரியாயே. 40

X. Partner of Her, Thy bride, of faultless old renown, 

THOU SEE'ST TO NONE BUT THEE I CLING!- 
Thou wear'st the crescent moon, O Civa-puram's King! 

Civan, in sacred Perun-turrai's shrine 
Who dwell'st,- shall I bow down to others? shall I praise? 

or may think them aids for me? speak Thou! 
Lord of the youthful bull! THOU SEE'ST I KNOW NO JOY; 

BE GRACIOUS, BID ME COME TO THEE! (40)