Tiruvasakam1.27
By Manikkavasakar

Prepared by Veeraswamy Krishnaraj
27. புணர்ச்சிப்பத்து -அத்துவித இலக்கணம்
(திருப்பெருந்துறையில் அருளியது - ஆசிரிய விருத்தம்)  Madurai Project
Hymn XXVII- punarchi pathu THE DECAD OF MYSTIC UNION or THE NATURE OF RELEASE
Shaivam.org  Translation by G.U. Pope
438. சுடர்பொற்குன்றைத் தோளாமுத்தை வாளா தொழும்பு கந்து
கடைபட்டேனை ஆண்டுகொண்ட கருணாலயனைக் கருமால் பிரமன்
தடைபட் டின்னுஞ் சார மாட்டாத் தன்னைத் தந்த என்னா ரமுதைப்
புடைபட் டிருப்ப தென்றுகொல்லோஎன் பொல்லா மணியைப் புணர்ந்தே. 4

I. When shall I reach the Inaccessible? 
The gleaming golden Hill, the flawless Pearl, the Shrine of tender love
Who made me, last of man, His own, in speechless service glad! He Whom 
Dark Mal and Brahma baffled yet approach not,- gave Himself, rare Balm! 
When shall I dwell in MYSTIC UNION JOINED WITH HIM, MY FLAWLESS GEM? (4)

439. ஆற்ற கில்லேன் அடியேன் அரசே அவனி தலத்ததைப் புலனாய
சேற்றி லழுந்தாச் சிந்தைசெய்து சிவனெம் பெருமானென்றேத்தி
ஊற்று மணல்போல் நெக்குநெக் குள்ளே உருகி ஓலமிட்டுப்
போற்றிநிற்ப தென்றுகொல்லோஎன் பொல்லா மணியைப் புணர்ந்தே. 8
II. My soul cries out for Thy rest. 
Thy servant I endure not, O my king, upon this earth in mire 
Of fivefold sense! In thought adoring Civan as my Lord, 
With mind that melts, like sands where waters spring, with cries of jubilee, 
When shall I praise, in MYSTIC UNION JOINED WITH HIM, MY FLAWLESS GEM? (8)
440. நீண்டமாலும் அயனும் வெருவ நீண்ட நெருப்பை விருப்பிலேனை
ஆண்டுகொண்ட என் ஆரமுதை அள்ளுறுள்ளத் தடியார்முன்
வேண்டுந் தனையும் வாய்விட்டலறி விரையார் மலர் தூவிப்
பூண்டு கிடப்ப தென்று கொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே. 12
III. When shall I join the happy saints? 
While lofty Mal and Ayan fear'd, a hill of fire Who rose, He loveless me
Made His! Ambrosia rare! Amid His saints, whose souls gush out with love, 
To hearts' content, my praise outpouring, wreath'd with fragrant flowers, 
When shall I lie, in MYSTIC UNION JOINED WITH HIM, MY FLAWLESS GEM? (12)
441. அல்லிக் கமலத் தயனும் மாலும் அல்லா தவரும் அமரர்கோனுஞ்
சொல்லிப் பரவும் நாமத் தானைச் சொல்லும் பொருளும் இறந்த சுடரை
நெல்லிக் கனியைத் தேனைப் பாலை நிறையின் அமுதை அமுதின் சுவையைப்
புல்லிப் புணர்வ தென்றுகொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே. 16
IV. His blissful presence. 
With Ayan of the Lotus, Mal, and all the rest,- with the Immortals's King, 
Speak praises to Him name! The Light surpassing speech and words' intent! 
The Nelli's Fruit; Milk, Honey, Balm with sweetness fill'd;- Ambrosia pure. 
When shall I clasp, in MYSTIC UNION JOINED WITH HIM, MY FLAWLESS GEM? (16)
442. திகழத் திகழும் அடியும் முடியுங் காண்பான் கீழ்மேல் அயனும் மாலும்
அகழப் பறந்துங் காண மாட்டா அம்மான் இம்மா நிலமுழுதும்
திகழப் பணிகொண்டென்னை ஆட்கொண்டு ஆ ஆ என்ற நீர்மையெலாம்
புகழப் பெறுவ தென்று கொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே. 20
 V. Hidden from gods, to me revealed. 
To see the foot and crown, that gleam with light, Ayan and Mal, down deep, 
Up high, they dug, they flew; but could not see His form! While all this earth 
Stood round, my service claimed, made me His own, and bade me come! His love 
When shall I praise, in MYSTIC UNION JOINED WITH HIM, MY FLAWLESS GEM? (20) 
443. பரிந்து வந்து பரமானந்தம் பண்டே அடியேற் கருள் செய்யப்
பிரிந்து போந்து பெருமா நிலத்தில் அருமா லுற்றேன் என்றென்று
சொரிந்த கண்ணீர் சொரிய உள்நீர் உரோமஞ் சிலிர்ப்ப (horripilation of hair) உகந்தன்பாய்ப்
புரிந்து நிற்பதென்று கோல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே. 24
VI. When shall I recover the old rapture? 
In love He came, and rapture gave in olden days, to me His slave! 
And then He left me on this wide vast earth to wander 'wildered! 
With floods of gushing tears, and frame with transport thrilled, in joy and love, 
When shall I stand, in MYSTIC UNION JOINED WITH HIM, MY FLAWLESS GEM? (24)
444.நினையப்பிறருக் கரிய நெருப்பை நீரைக் காலை நிலனை விசும்பைத்
தனையொப் பாரை யில்லாத தனியை நோக்கித் தழைத்துத் தழு த்தகண்டம்
கனையப் கண்ணீர் அருவி பாயக் கையுங் கூப்பிக் கடிமலராற்
புனையப் பெறுவதென்று கொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே. 28
 VII. When shall I know Him? 
Hard to others' thought, thou'rt fire, water, wind, earth, ether; Him, 
Sole One to whom none can compare; in joy beholding, praising loud, 
While tears in torrents flow, adoring hand out-stretched, fragrant flower-wreaths
When shall I bring, in MYSTIC UNION JOINED WITH HIM, MY FLAWLESS GEM? (28)
445. நெக்குநெக்குள் உருகி உருகி நின்றும் இருந்தும் கிடந்தும் எழுந்தும் (=stand, sit, lie, rise)
நக்கும் அழுதும் தொழுதும் வாழ்த்தி நானாவிதத்தாற் கூத்தும் நவிற்றிச்
செக்கர்போலும் திருமேனிதிகழ நோக்கிச் சிலிர்சி லிர்த்துப்
புக்கு நிற்ப தென்றுகொல்லோ என் பொல்லா மணியை
My heart should soften and melt and worship and praise Him while standing, sitting, lying, rising, laughing, and crying. I must perform dance facing all directions and be excited looking at His reddish hued sacred radiant body. When can I do all these and attain oneness with Him, the faultless Gem! ---kurunathan.com
VIII. The heavenly re-union. 
In bliss dissol'd, soul melted utterly, with every gesture meet:
Laughter and tears, homage of hand and lip,- with every mystic dance,-
To see with joyous thrill, that Sacred Form, like ruddy evening sky, 
When shall I pass, in MYSTIC UNION JOINED WITH HIM, MY FLAWLESS GEM? (32)
446.தாதாய் மூவே ழுலகுக்குங் தாயே நாயேன் தனையாண்ட (3X7 worlds)
பேதாய் பிறவிப் பிணிக்கோர் மருந்தே பெருந்தேன் பில்க எப்போதும்
ஏதா மணியே என்றென்றேத்தி இரவும் பகலும் எழிலார்பாதப்
போதாய்ந் தணைவதென்று கொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே. 36
My Father! Mother to the twenty-one worlds! O the Supreme Lord who enslaved this dog like soul! You the Cure for the ailment of birth! The wise one who delivers graces that is sweet like honey. I like to praise You with the above words. I yearn to be attached to your beautiful feet day and night. When can I do all these and attain oneness with You, the faultless Gem! --Kurunathan.com
IX. Parvathi praised as one with Civan. 
Sire and Mother of the seven (21 Worlds) worlds old; Who me, a dog, mad'st Thine; 
Thee only Balm for woes of life; Thee wisdom's honey-dripping Gem, 
For ever praising,- night and day. Thy beauteous foot with flow'ry wreaths
When shall I deck, in MYSTIC UNION JOINED WITH HIM, MY FLAWLESS GEM? (36)
447. காப்பாய் படைப்பாய் கரப்பாய் முழுதுங் கண்ணார் விசும்பின் விண்ணோர்க்கெல்லாம்
முப்பாய மூவா முதலாய் நின்ற முதல்வா முன்னே எனையாண்ட
பார்ப்பானே எம்பரமா என்று பாடிப் பாடிப் பணிந்து பாதப்
பூப்போதணைவ தென்று கொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே. 447
 X. His eternity. 
Thou guard'st, creat'st, destroy'st; 'midst all that fill the spacious heaven
The ELDER Thou, and First, Who knows no eld; Brahman, Who mad'st me Thine; 
Thou Infinite! For ever singing, bowing low, Thy foot's fair flower 
When shall I clasp, in MYSTIC UNION JOINED WITH HIM, MY FLAWLESS GEM? (40)