Tiruvasakam1.25
Manikkavasakar
Prepared by Veeraswamy Krishnaraj
25. ஆசைப்பத்து - ஆத்தும இலக்கணம் (திருப்பெருந்துறையில் அருளியது
-அறுசீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்)   Madurai Project
Hymn XXV- aasai pathu  THE DECAD OF DESIRE or  KNOWLEDGE OF 'SELF'
I. I long for Thy summons.  Source: Shaivam.org  Translation by G.U.Pope
418. கருடக்கொடியோன் காணமாட்டாக் கழற்சே வடியென்னும்
பொருளைத் தந்திங் கென்னை யாண்ட பொல்லா மணியையோ
இருளைத் துரந்திட் டிங்கே வாவென்றங்கே கூவும்
அருளைப் பெறுவான் ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே. 4
I. O flawless Gem, who gav'st the wealth of Thine own roseate feet,- 
By the kite-banner'd King unseen,- and here mad'st me Thine own! 
My darkness drive far off; say 'hither come'! The grace to gain 
That calls me there to dwell, BEHOLD, O SIRE, MY SOUL HATH YEARN'D! (4)
419. மொய்ப்பால் நரம்பு Tendon கயிறாக மூளை என்பு தோல் போர்த்த
குப்பாயம்புக் கிருக்க கில்லேன் கூவிக்கொள்ளாய் கோவேயோ
எப்பா லவர்க்கும் அப்பாலாம் என்னாரமுதேயோ
அப்பா காண ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே. 8
II. Weary of the flesh 
I not endure to wear this garment of the flesh,- of joints (மூளை = brain)
And bones compact,- with fatness filled,-covered with skin! O King,
Call me! To men of every sort, as fits their case Thou com'st 
Ambrosia rare, ah, Thee to see, BEHOLD, O SIRE, I YEARN! (8)
420. சீவார்ந் தீமொய்த் தழுக்கொடு திரயுஞ் சிறுகுடில் இது சிதையக்
கூவாய் கோவே கூத்தா காத்தாட் கொள்ளுங் குருமணியே
தேவா தேவர்க் கரியானே சிவனே சிறிதென் முகநோக்கி
ஆவா வென்ன ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே. 12
III. Let me hear Thy call. 
Call me, my King, that this poor frame, with vileness fill'd, may die! 
Thou 'Dancer,' Guru-gem, Who guarding makest me Thine; 
O God by gods unreach'd! Civan! Look on my face awhile.
For Thee, to hear Thee call, BEHOLD, O SIRE, MY SOUL HATH YEARN'D! (12)
421. மிடைந்தெலும் பூத்தை மிகக்கழுக் கூறல் வீறிலி நடைக்கூடம்
தொடர்ந்தெனை நலியத் துயருறு கின்றேன் சோத்தம் எம்பெருமானே
உடைந்துநைந் துருகி உன்னொளி நோக்கி உன்திரு மலர்ப்பாதம்
அடைந்து நின்றிடவும் ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே. 16
IV. I wait in humble hope. 
This walking cell, with loathy filth filled full, contemptible,
Clings to me, and afflicts my soul! Hail to Thee, mighty Lord
Broken, subdued, and melted, looking ever for Thy light, 
Thy blest feet's flower to gain, BEHOLD, O SIRE, MY SOUL HATH YEARN'D! (16)
422. அளிபுண்ணகத்துப் புறந்தோல் மூடி அடியேனுடையாக்கை
புளியம் பழமொத் திருந்தேன் இருந்தும்விடையாய் பொடியாடி
எளிவந்தென்னை ஆண்டுகொண்ட என்னாரமுதேயோ
அளியேன் என்ன ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே. 20
V. Where are the old joys? 
Within this frame is loathsome; and without skin-covered sores, 
Sore grief! Thou Rider on the Bull! Bedeckt with ashes white, 
Stooping to me, Thou cam'st, and mad'st me Thine; Ambrosia rare! 
For word of tenderness, BEHOLD, O SIRE, MY SOUL HATH YEARN'D! (20)
423. எய்த்தேன் நாயேன் இனியிங் கிருக்ககில்லேன் இவ்வாழ்க்கை
வைத்தாய் வாங்காய் வானோர் அறியா மலர்ச்சே வடியானே
முத்தா உன்றன் முகவொளி நோக்கி முறுவல் நகைகாண
அத்தா சால ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே. 24
VI. I long for the life of heaven, 
Weary, mere dog, I cannot here abide. Take back earth's joys 
Thou gav'st, O Thou whose roseate teet-flowers heaven's sons know not! 
Thou know'st no bond! Thy face's light, the gleaming of Thy smile,- 
To see, BEHOLD, O SIRE, HOW EAGERLY MY SOUL HATH YEARN'D! (24)
424. பாரோர் விண்ணோர் பரவியேத்தும் பரனே பரஞ்சோதி
வாராய் வாரா வுலகந்தந்து வந்தாட்கொள்வானே
பேராயிரமும் பரவித் திரிந்தெம் பெருமான் என ஏத்த
ஆரா அமுதே ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே. 28
VII. I long to praise Thee there 
Thou Infinite, Whom earth and heaven extol, Thou Light superne,- 
Thou cam'st to make me Thine! Give me the world of final bliss; 
Thy thousand names I'd circling sing. Thee mighty Lord to praise
Th' Ambrosia ever new, BEHOLD, O SIRE, MY SOUL HATH YEARN'D! (28)
425. கையால் தொழுதென் கழற்சே வடிகள் கழுமத் தழுவிக்கொண்டு
எய்யா தென்றன்தலைமேல் வைத்தெம்பெருமான் பெருமானென்று
ஐயா என்றன் வாயா லரற்றி அழல்சேர மெமுகொப்ப
ஐயாற் றரசே ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே. 32
VIII. My whole being worships Thee. 
With hands Thee worshipping, embracing close Thy jewell'd feet, 
And placing still unwearied on my head, 'Our Lord, our Lord,' I cry;- 
'My Teacher,' with my mouth I cry. Like wax before the fire, 
King of Aiyarr'! BEHOLD, O SIRE, MY MELTING SOUL HATH YEARN'D! (32)
426. செடியா ராக்கைத் திறமற வீசிச் சிவபுரநகர்புக்குக்
கடியார் சோதி கண்டுகொண்டென் கண்ணினை களிகூரப்
படிதா னில்லாப் பரம்பரனே உன்பழஅடியார் கூட்டம்
அடியேன் காண ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே. 36
IX. When shall I join Thy saints? 
To cast quite off this sinful frame; to enter Civan's home; 
To see the Wondrous Light, that so these eyes may gladness gain; 
O Infinite, without compare! Th' assembly of Thy saints 
Of old, to see, BEHOLD, O SIRE, THY SERVANT'S SOUL HATH YEARN'D! (36)
427. வெஞ்சேலனைய கண்ணார்தம் வெகுளிவலையில் அகப்பட்டு
நைஞ்சேன் நாயேன் ஞானச் சுடரே நானோர் துணைகாணேன்
பஞ்சேரடியாள் பாகத்தொருவா பவளத் திருவாயால்
அஞ்சேல் என்ன ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே. 40
X. Thy voice stills passion 
Caught in the net of passion fierce by those whose eyes shine bright, 
I languish'd,- I a cur,- O light of truth! and saw no help. 
Thou Half of Her with gentle foot!- Thou only One! To hear 
Thee say with coral lips, 'Fear not, 'BEHOLD, O SIRE, MY SOUL HATH YEARN'D! (40)