Tiruvasakam1.24 By Manikkavasakar Prepared by Veeraswamy Krishnaraj |
|
24. அடைக்கலப் பத்து - பக்குவ நிண்ணயம் (திருப்பெருந்துறையில் அருளியது - கலவைப் பாட்டு)Source: Madurai Project |
Hymn XXIV- adaikalap pathu THE
REFUGE - DECAD
|
It seems probable that this song was founded upon the Buddhist formula which required the devotee to utter nine times the word saranam, three times to Buddha, three times to the law or doctrine, and three times to the congregation (= church, or order). This entire abandonment of self on the part of the disciple was his initation into the Buddhist system. Here our author takes 'refuge' at the foot of the loving Master Who has called him, and will at last receive him to Himself. This element of personal devotion to One Whom he believes to have been the Supreme manifested in the flesh is very striking, and gives a power that was wanting in the Buddhist system. We must remember that all his life our sage was brought into hostile contact with the Buddhists, and that he fashions his poems so as to afford the strongest possible contrast to that which he hated. |
|
408. செழுக்கமலத் திரளனநின் சேவடி நேர்ந்தமைந்த பழுத்தமனத் தடியருடன் போயினர் யான் பாவியேன் புழுக்கணுடைப் புன்குரம்பைப் பொல்லாக்கல்வி ஞானமிலா அழுக்குமனத் தடியேன் உடையாய் உன் அடைக்கலமே. 4 |
I.
Thy saints like clustering lotus-flowers have joined Thy roseate foot; Mature of mind, with Thee they're gone; while I, a sinful man, In body foul and vile remain, devoid of wisdom's lore, Of mind impure. MASTER! THY SLAVE, I THEE MY REFUGE MAKE! (4) |
409.
வெறுப்பனவே செய்யும் என்சிறுமையைநின் பெருமையினாற் பொறுப்பவனே அராப் பூண்பவனேபொங்க கங்கைசடைக் செறுப்பவனே நின்திருவருளால் பிறவியைவேர் அறுப்பவனே உடையாய்அடியேன்உன் அடைக்கலமே. 8 |
II. My meanness only hateful things can do; Thy greatness still Forgives!- The serpent-gem Thou wear'st; swells Ganga's stream Thy crest; Thou, by Thy sacred grace, the root of these my 'births' Dost cut away, MASTER! THY SLAVE, I THEE MY REFUGE MAKE! (8) |
410.
பெரும்பெருமான்என் பிறவியை வேரறுத்துப் பெரும்பிச்சுத் தரும்பெருமான் சதுரப்பெருமான் என் மனத்தினுள்ளே வரும்பெருமான் மலரோன் நெடுமாலறியாமல் நின்ற அரும்பெருமான் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே. 12 |
III.
Great Peruman, Thou who dost free from 'birth'! Thou frenzy giv'st O Peruman! - Within my mind, O Peruman the wise, Thou com'st. The flow'ry One, and giant Mal too, knew Thee not; Rare Peruman! MASTER! THY SLAVE, I THEE MY REFUGE MAKE! (12) |
411.
பொழிகின்ற துன்பப் புயல்வெள்ளத்தில்நின் கழற்புணைகொண் டிழிகின்ற அன்பர்கள் ஏறினர் வான்யான் இடர்க்கடல்வாய்ச் சுழிசென்று மாதர்த் திரைபொரக் காமச் சுறவெறிய அழிகின்றனன் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே. 16 |
IV.
In floods from sorrow's pouring clouds that rise, Thy loving ones Sinking have seized the raft of Thy blest foot, and risen to heaven. Whirl'd amid trouble's sea, where women-billows' dash, and lusts's Sea-monster wounds, I sink. MASTER! I THEE MY REFUGE MAKE! (16) |
412.
சுருள்புரி கூழையர் சூழலிற் பட்டுன் திறம்மறந்திங்கு இருள்புரி யாக்கையிலேகிடந் தெய்த்தனன் மைத்திடங்கண் வெருள்புரிமான்அன்ன நோக்கிதன் பங்கவிண்ணோர்பெருமான் அருள்புரியாய் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே. 20 |
V.
Fall'n 'mid the circling troops of them of curling locks; Thy power Forgetting; in this body dark I wearied lay. Thou Half Of Her with wide balck eyes and glance like startled fawn! Heaven's Lord! Give me Thy grace! MASTER! THY SLAVE, I THEE MY REFUGE MAKE! (20) |
413.
மாழைமைப் பாவிய கண்ணியர் வன்மத் திடவுடைந்து தாழியைப் பாவு தயிர்போல் தளர்ந்தேன் தடமலர்த்தாள் வாழியெப் போதுவந்தெந்நாள் வணங்குவன் வலவினையேன் ஆழியப் பாவுடை யாய் அடியேன் உன் அடைக்கலமே. 24 |
VI.
Broken by mighty churning-staff of those of jet black eyes, Like cream in churn I bounded, suffered pain. O flow'r-foot, Hail! When com'st Thou? When shall I whose deeds are 'mighty' worship Thee? Lord of the Earth! MASTER! THY SLAVE, I THEE MY REFUGE MAKE! (24) |
414.
மின்கணினார்நுடங்கும் இடையார் வெகுளிவலையில் அகப்பட்டுப் புன்கணனாய்ப்புரள் வேனைப் புரளாமற் புகுந்தருளி என்கணிலே அமுதூற்றித்தித் தித்தென் பிழைக்கிரங்கும் அங்கணனே உடையாய் அடியேன் உன் அடைக்கலமே. 28 |
VII. Caught in the net of hot desire for those of glancing eyes And slender form, I writh'd and roll'd in sorrow sore; that I Wallow no more, pit my fault, appear, pour sweetest balm! Lord of the temple-court! MASTER! I THEE MY REFUGE MAKE! (28) |
415.
மாவடு வகிரன்ன கண்ணியங் காநின் மலரடிக்கே கூவிடு வாய்கும்பிக் கேயிடு வாய் நின் குறிப்பறியேன் பாவிடையாடு குழல்போற் கரந்து பரந்த உள்ளம் ஆகெடுவேன் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே. 32 |
VIII.
Thou Half of Her with beauteous eyes! unto Thy flowr'y feet Thou call'st me,- then dismisses me to deepest depths; Thy thought I know not. Like pipe's changing tones now sinks, now swells my soul. Alas! I perish quite! MASTER! I THEE MY REFUGE MAKE! (32) |
416.
பிறிவறியார் அன்பாநின் அருட்பெய்கழல் தாளிணைக்கீழ் மறிவறியாச் செல்வம்வந்துபெற்றார் உன்னை வந்திப்பதோர் நெறியறி யேன் நின்னையே அறியேன் நின்னையே அறியும் அறிவறின் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே. 36 |
IX. Thy loving ones beneath
Thy jewell'd feet that grace confer Abiding, gain the bliss that knows no refluent tide. No way To worship Thee I find; in sooth I know not Thee, noe lore That tells of Thee! MASTER! THY SLAVE, I THEE MY REFUGE MAKE! (36) |
417.
வழங்குகின்றாய்க்குன்
அருளார் அமுதத்தை வாரிக்கொண்டு விழுங்குகின்றேன்விக்கின் வினையேன் என்விதியின்மையால் தழங்கருந்தேனன்ன தண்ணீர் பருகத்தந் துய்யக் கொள்ளாய் அழுங்குகின்றேன் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே. 40 |
X. Eager I took ambrosia of Thy grace so freely pour'd; I strove to drink; my sinful soul by evil fate was bound! Give me to taste the rare stream gushing honey-sweet, and save! I sink in woe! MASTER! THY SLAVE, I THEE MY REFUGE MAKE! (40) |