Tiruvasakam1.4

Prepared by Veeraswamy Krishnaraj

1.4. போற்றித் திருஅகவல்

Hymn 4 poṛṛith thiruagaval

THE SACRED AGAVAL OF PRAISE

(தில்லையில் அருளியது - நிலைமண்டில ஆசிரியப்பா)

Madurai Project

 Source: Shaivam.org. Translation: G.U.Pope

நான்முகன் முதலா வானவர் தொழுது எழ
ஈர் அடியாலே மூவுலகு அளந்து
நால் திசை முனிவரும் ஐம்புலன் மலரப்
போற்றி செய் கதிர்முடித் திருநெடுமால் அன்று
அடிமுடி அறியும் ஆதரவு அதனில்
கடும் முரண் ஏனம் ஆகிமுன் கலந்து
ஏழ்தலம் உருவ இடந்து பின் எய்த்து
ஊழி முதல்வ சயசய என்று
வழுத்தியும் காணா மலர்அடி இணைகள்
வழுத்துதற்கு எளிதாய் வார் கடல் உலகினில்         10

 

Lines 1-10 The Feet of Civan
While the Four-faced and other heavenly dwellers rose,

Adoring, sacred Māl, whose head with rays is crowned,

With His two feet measured the threefold world,-

While saints from the four quarters praised with all their sentient powers,

Eager that day Thy foot and crown to know, (5)

He then became a fierce strong boar, and rushing on

Dug down through sevenfold regions, wearied cried at last:

Eternal Source of all, to Thee be triumphs manifold !'

Yet though He worship paid, Thy pair of Feet-flowers saw he not;

Yet Thou to me Thy worshipper art easy of access ! (10)

 

யானை முதலா எறும்பு ஈறாய
ஊனம் இல் யோனியின் உள்வினை பிழைத்தும்
மானுடப் பிறப்பினுள் மாதா உதரத்து
ஈனம் இல் கிருமிச் செருவினில் பிழைத்தும்
ஒரு மதித் தான்றியின் இருமையில் பிழைத்தும்
இருமதி விளைவின் ஒருமையில் பிழைத்தும்
மும்மதி தன்னுள் அம்மதம் பிழைத்தும் 17
ஈர் இரு திங்களில் பேர் இருள் பிழைத்தும் 18
அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும் 19
ஆறு திங்களில் ஊறு அலர் பிழைத்தும         20

On earth girt by the watery seas, from elephant to ant,
Through many matrices I passed,
Obtained a human form within my mother's womb.

(from kurunathan.com)
In the womb, I survived my first month from breaking up into two pieces; 15

the second month from being dissolved;  16

the third month from the fluid that flows in the womb;  17

the fourth month from the darkness that prevailed there; 18

the fifth month from being destroyed;  19

the sixth month from the expansion of the womb. 20
(from kurunathan.com)

ஏழு திங்களில் தாழ் புவி பிழைத்தும் 21
எட்டுத் திங்களில் கட்டமும் பிழைத்தும் 22
ஒன்பதில் வருதரு துன்பமும் பிழைத்தும் 23
தக்க தசமதி தாயொடு தான்படும்  24
துக்க சாகரம் துயர் இடைப்பிழைத்தும் 25
ஆண்டுகள் தோறும் அடைந்த அக்காலை 26
ஈண்டியும் இருத்தியும் எனைப்பல பிழைத்தும் 27
காலை மலமொடு கடும்பகல் பசி நிசி 28
வேலை நித்திரை யாத்திரை பிழைத்தும் 29
கரும்குழல் செவ்வாய் வெள்நகைக் கார்மயில்         30

The seventh month from being expelled from the womb;  21

the eighth month from the danger of over growth; 22

the ninth month from pain and suffering; 23

the tenth month from the sea of sorrow shared with the mother. 24

Tha above from kurunathan.com

Thus was I born into the sad sea of th' afflictive life. (25)
Then during each year as it met me 26
As the yers marched on, I outlived little ills 27

Morning's routine, hunger in noontide hour, and night 28
For sleep. In journeys oft I lived. 29
Jet black locks, and crimson lips, and radiant smiles were hers; and like peacocks(30)
Into love's sea I plunged.

ஒருங்கிய சாயல் நெருங்கி உள் மதர்த்துக் 31
கச்சு அற நிமிர்ந்து கதிர்ந்து முன் பணைத்து 32
எய்த்து இடைவருந்த எழுந்து புடைபரந்து 33
ஈர்க்கு இடைபோகா இளமுலை மாதர்தம் 34
கூர்த்த நயனக் கொள்ளையில் பிழைத்தும் 35
பித்த உலகர் பெரும் துறைப் பரப்பினுள் 36
மத்தம் களிறு எனும் அவாவிடைப் பிழைத்தும் 37
கல்வி என்னும் பல்கடல் பிழைத்தும் 38
செல்வம் என்னும் அல்லலில் பிழைத்தும் 39
நல்குரவு என்னும் தொல்விடம் பிழைத்தும்         40

  31 

  32

33

34

35 

In the wide marts where foolish worldlings toil 36

I lived, still slave to fierce desires. 37

I lived by sea of learning multiform; 38

I lived in sorrow men call wealth; 39

I lived 'mid ancient stings of poverty, (40)

 

 

புல்வரம்பு ஆய பலதுறை பிழைத்தும்
தெய்வம் என்பதோர் சித்தம் உண்டாகி
முனிவு இலாதது ஓர் பொருள் அது கருதலும்
ஆறு கோடி மாயா சக்திகள்
வேறு வேறு தம் மாயைகள் தொடங்கின 45
ஆத்தம் ஆனார் அயலவர் கூடி 46
நாத்திகம் பேசி நாத்தழும்பு ஏறினர் 47
சுற்றம் என்னும் தொல்பசுக் குழாங்கள் 48
பற்றி அழைத்துப் பதறினர் பெருகவும் 49
விரதமே பரம் ஆக வேதியரும்         50

And thus in varied forms and fortunes spent my days. 41

Then wondrous thought of the Divine, so-called, arose. 42

Soon as I knew that BEING, free from hate, unique, 43

Delusive powers in ever-changing millions 44

Began beguiling varied play. (45)

Relations, neighbours, came around, 46

With fluent tongue they urged their 'atheism' 47

Friends around (such herds of cattle old !)- 48

Seiz'd me, call'd, hurried to and fro; 49

The Brāhman said 'the way of penance is supreme'; (50)

 

சரதம் ஆகவே சாத்திரம் காட்டினர்
சமய வாதிகள் தம்தம் தங்களே
அமைவது ஆக அரற்றி மலைந்தனர்
மிண்டிய மாயா வாதம் என்னும்
சண்ட மாருதம் சுழிந்து அடித்துத் தாஅர்த்து
உலோகாய தமெனும் ஒள் திறப்பாம்பின்
கலா பேதத்த கடுவிடம் எய்தி
அதில் பெருமாயை எனைப்பல சூழவும்
தப்பாமே தாம் பிடித்தது சலியாத்
தழலது கண்ட மெழுகு அது போலத்         60

And others showed the law of trusting love !

Sectarian disputants complacently

Discordant tenets shouted loud and fought.

Then haughty Vedānt creed unreal came,

Whirled, dashed, and roared like furious hurricane. (55)

Lōkāyathan a glistening mighty snake

Brought cruel poisoned heresies.

Whilst these delusions, endless, girt me round,

 

Lines 59 - 86 His conversion

 

Lest I should go astray, He laid His hand on me !

As wax before the unwearied fire (60)

 

தொழுது உளம் உருகி அழுது உடல்கம்பித்து
ஆடியும் அலறியும் பாடியும் பரவியும்
கொடிறும் பேதையும் கொண்டது விடாதென
படியே ஆகி நல் இடைஅறா அன்பின்
பசுமரத்து ஆணி அறைந்தால் போலக் 65
கசிவது பெருகிக் கடல் என மறுகி
அகம் குழைந்து அனுகுலமாய் மெய் விதிர்த்துச்
சகம் பேய் என்று தம்மைச் சிரிப்ப
நாண் அது ஒழிந்து நாடவர் பழித்துரை
பூண் அது ஆகக் கோணுதல் இன்றிச்         70

With melting soul I worshipt, wept, and bent myself,

Danced, cried aloud, and sang, and prayed.

They say: 'The tooth of elephant and woman's grasp relax not,'

So I with love, real, interrnitting never,

Was pierced, as wedge (nail) driven into soft young tree. (65)

All tears, I like the refluent sea was tossed;

Soul was subdued, and body quivered with delight.

While the world called me demon, mocking me,

False shame I threw aside; the folk's abusive word

I took as ornament; nor did I swerve. (70)

 

சதுர் இழந்து அறிமால் கொண்டு சாரும்
கதியது பரமா அதிசயம் ஆகக்
கற்றா மனம் எனக் கதறியும் பதறியும்
மற்று ஓர் தெய்வம் கனவிலும் நினையாது
அருபரத்து ஒருவன் அவனியில் வந்து 75
குருபரன் ஆகி அருளிய பெருமையைச்
சிறுமை என்று இகழாதே திருவடி இணையைப்
பிறிவினை அறியா நிழல் அது போல
முன் பின்னாகி முனியாது அத்திசை
என்பு நைந்து உருகி நெக்கு நெக்கு ஏங்கி         80

My mind was rapt;-a fool, but in my folly wise,-

The goal I sought to reach infinity ! All wondering desire,

As cow yearns for its calf, I moaning, hurried to and fro.

 

Not ev'n in dreams thought I of other gods.

The One most precious Infinite to earth came down; (75)

Nor did I greatness of the Sage superne (?supreme) contemn (disdain, contempt),

Who came in grace. Thus from the pair of sacred feet

Like shadow from its substance parting not,

Before, behind, at every point, to it I clung.

My inmost self in strong desire dissolved, I yearned; (80)

 

அன்பு எனும் ஆறு கரை அது புரள
நன்புலன் ஒன்றி நாத என்று அரற்றி
உரை தடுமாறி உரோமம் சிலிர்ப்ப
கரமலர் மொட்டித்து இருதயம் மலரக்
கண்களி கூர நுண் துளி அரும்ப 85
சாயா அன்பினை நாள்தொரும் தழைப்பவர்
தாயே ஆகி வளர்த்தனை போற்றி
மெய் தரு வேதியன் ஆகி வினைகெடக்
கைதரவல்ல கடவுள் போற்றி
ஆடக மதுரை அரசே போற்றி         90

Love's river overflowed its banks;

My senses all in Him were centredl; 'Lord !' I cried.

With stammering speech, and quivering frame

I clasped adoring hands; my heart expanding like a flower.

Eyes gleamed with joy and tears distilled. (85)

His love that fails not day by day still burgeons forth !

 

To the end : Praises

 

Like mother, Thou hast brought me up, I praise!

God, strong to cancel deeds of ours,

Who didst become in truth a Sage, I praise!

King of golden Madura ! (90)

 

கூடல் இலங்கு குருமணி போற்றி
தென் தில்லை மன்றினுள் ஆடி போற்றி
இன்று எனக்கு ஆர் அமுது ஆனாய் போற்றி
மூவா நான்மறை முதல்வா போற்றி
சேவார் வெல்கொடிச் சிவனே போற்றி
மின் ஆர் உருவ விகிர்தா போற்றி
கல் நார் உரித்த கனியே போற்றி peeled fruit
காவாய் கனகக் குன்றே போற்றி
ஆ ஆ என்தனக்கு அருளாய் போற்றி
படைப்பாய் காப்பாய் துடைப்பாய் போற்fறி         100

Guru Pearl, in KUdal shining bright !

Dancing in southern Tillai's court,

This day to me precious ambrosia Thou !

Source of the fourfold mystic Scroll that ne'er grows old !

Civan, whose conquering banner is the Bull ! (95)

Thy varied form gleams as the lightning;-Thee I praise!

In me the stony heart Thou softenest.

Guard me, Thou guarded hill of gold !

Ah, give Thy grace to me !

Thou dost create, Thou dost preserve, Thou dost destroy ! (100)

 

இடரைக் களையும் எந்தாய் போற்றி impediment
ஈச போற்றி இறைவா போற்றி
தேசப் பளிங்கின் திரளே போற்றி
அரைசே போற்றி அமுதே போற்றி
விரை சேர் சரண விகிர்தா போற்றி 105

வேதி போற்றி விமலா போற்றி
ஆதி போற்றி அறிவே போற்றி
கதியே போற்றி கனியே போற்றி
நதி நேர் நெஞ்சடை நம்பா போற்றி
உடையாய் போற்றி உணர்வே போற்றி         110

Father, who dost remove all griefs, I praise!

Ruler, I praise! My King, I praise!

Mount of shining crystal, -praise!

Monarch, to Thee be praise! Ambrosia, -praise!

Unfailing refuge are Thy fragrant-feet ! (105)

Thee Vēdic Sage, I praise! Spotless One,- praise!

Thee First, I praise! Wisdom, I praise!

Thou Goal I seek, praise! Sweet fruition, Thee I praise!

Our Lord, on Whose bright crest the river flows,

Our Master, praise! Understanding, praise! (110)

 

கடையேன் அடிமை கண்டாய் போற்றி
ஐயா போற்றி அணுவே போற்றி
சைவா போற்றி தலைவா போற்றி
குறியே போற்றி குணமே போற்றி
நெறியே போற்றி நினைவே போற்றி 115
வானோர்க்கு அரிய மருந்தே போற்றி
ஏனோர்க்கு எளிய இறைவா போற்றி
மூவேழ் சுற்றமும் முரண் உறு நரகு இடை
ஆழாமே அருள் அரசே போற்றி Grace king praise
தோழா போற்றி துணைவா போற்றி         120

Thou hast beheld the servitude of lowliest me,

O Teacher, -praise! Minute as atom, -praise!

O Caivan, -praise! Our Chief, I praise!

Our Sign, I praise! Virtue, I praise!

Thou Way, I praise! O Thought, I praise! (115)

Balm, hardly by celestials gained, I praise!

King, easy of access to others, praise!

Monarch in grace, Who savest lest we sink

In hell's hated one-and-twenty rounds, I praise!

Companion, -praise! My Helper, -praise! (120)

 

வாழ்வே போற்றி என் வைப்பே போற்றி
முத்தா போற்றி முதல்வா போற்றி
அத்தா போற்றி அரனே போற்றி
உரைஉணர்வு இறந்த ஒருவ போற்றி
விரிகடல் உலகின் விளைவே போற்றி
அருமையில் எளிய அழகே போற்றி
கருமுகி லாகிய கண்ணே போற்றி
மன்னிய திருவருள் மலையே போற்றி
என்னையும் ஒருவ னாக்கி இருங்கழல்
சென்னியில் வைத்த சேவக போற்றி         130

O Bliss of life, I praise! My Treasure, praise!

O free from bonds, praise! First One, praise!

Father, praise! Haran, praise!

Thou One, transcending word and understanding, praise!

Yield of the world girt by the extended sea, praise! (125)

Beauty rare, yet easy of access, I praise!

 

Eye like an azure cloud, I praise!

Abiding Mount of sacred grace, I praise!

Me, too, Thou mad'st a man, Thy twin feet

Thou placed'st on my head, O Warrior, praise! (130)

 

தொழுதகை துன்பந் துடைப்பாய் போற்றி
அழிவிலா ஆனந்த வாரி போற்றி
அழிவதும் ஆவதும் கடந்தாய் போற்றி
முழுவதும் இறந்த முதல்வா போற்றி
மான்நேர் நோக்கி மணாளா போற்றி  135
வான்அகத்து அமரர் தாயே போற்றி
பார்இடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி
நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி
தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி
வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி         140

Thou dost wipe off all sorrow from adoring hand, praise!

Sea of imperishable rapture, praise,

Thou dost transcend all forms that pass and come renewed, praise!

First One surpassing all, praise!

Bridegroom of Her with fawnlike eyes, praise! (135)

Mother of the Immortals in the heavenly land, praise!

Fivefold Thou dost in earth extend, -praise!

Fourfold Thou dost exist in the water, -praise!

Threefold in fire Thou shinest,- praise!

Twofold in the air Thou art all glorious, -praise! (140)

 

வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி
அளிபவர் உள்ளதது அமுதே போற்றி
கனவிலும் தேவர்க்கு அரியாய் போற்றி
நனவிலும் நாயேற்கு அருளினை போற்றி
இடைமருது உறையும் எந்தாய் போற்றி  145
சடைஇடைக் கங்கை தரித்தாய் போற்றி
ஆரூர் அமர்ந்த அரசே போற்றி
சீர் ஆர் திருவையாறா போற்றி
அண்ணாமலை எம் அண்ணா போற்றி
கண் ஆர் அமுதக் கடலே போற்றி         150

One in the ether Thou hast sprung forth, praise!

Ambrosia of the troubled mind, praise!

Hard to be approached by gods e'en in a dream, praise!

In waking hour to me a cur Thou gavest grace, praise!

Father, Who dwell'st in Idai-maruthu, praise! (145)

Thou bearest Gangai on Thy crest, praise!

King in Arūr abiding, praise!

Lord of glorious Tiru-vaiyāru, praise!

Our Prince of Annamalai, praise!

Sea of ambrosia, filling all the place,- praise! (150)

 

ஏகம்பத்து உறை எந்தாய் போற்றி
பாகம் பெண் உரு ஆனாய் போற்றி
பராய்த் துறை மேவிய பரனே போற்றி
சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி
மற்று ஓர் பற்று Any other desire இங்கு அறியோன் போற்றி
குற்றாலத்து எம் கூத்தா போற்றி
கோகழி மேவிய கோவே போற்றி
ஈங்கோய் மலை எந்தாய் போற்றி
பாங்கு ஆர் பழனத்து அழகா போற்றி
கடம்பூர் மேவிய விடங்கா போற்றி         160

Our Father dwelling in Ekambam, praise!

Thou Who in form art half a woman, -praise!

Who dwell'st supreme in Perun-turrai, -praise!

Civan Who dwell'st in Sirāp-palli, -praise!

None other refuge here I know, -praise! (155)

Our Dancer in Kuṛṛālam, -praise!

Our King dwelling in Gōkazi, praise!

Our Father of Ingōy's Mount, praise!

Beauteous One of seemly Pazhanam, praise!

Idangan Who dwell'st in Kadambūr, praise! (160)

 

அடைந்தவர்க்கு அருளும் அப்பா போற்றி
இத்தி தன்னின் கீழ் இருமூவர்க்கு
அத்திக்கு அருளிய அரசே போற்றி
தென்னாடுடைய சிவனே போற்றி
என் நாட்டவர்க்கும் இறைவா போற்றி 165
ஏனக் குருளைக்கு அருளினை போற்றி
மானக் கயிலை மலையாய் போற்றி
அருளிட வேண்டும் அம்மான் போற்றி
இருள் கெட அருளும் இறைவா போற்றி
தளர்ந்தேன் அடியேன் தமியேன் போற்றி         170

Father, gracious to those that come to Thee, praise!

Beneath the Itti tree to six,

King, Thou wert gracious, and to th' elephant, -praise!

Civan, Lord of the southern land, praise!

King of our country folk, -praise! (165)

Thou wert gracious to the litter of the boar, -praise!

Lord of glorious Kailai's Mount praise!

Father, Who grants us grace, -praise!

King, Who our darkness dissipates, -praise!

I Thy slave languish all alone, -praise! (170)

 

களம் கொளக் கருத அருளாய் போற்றி
அஞ்சேல் என்று இங்கு அருளாய் போற்றி
நஞ்சே அமுதா நயந்தாய் போற்றி
அத்தா போற்றி ஐயா போற்றி
நித்தா போற்றி நிமலா போற்றி  175
பத்தா போற்றி பவனே போற்றி
பெரியாய் போற்றி பிரானே போற்றி
அரியாய் போற்றி அமலா போற்றி
மறையோர் கோல நெறியே போற்றி
முறையோ தரியேன் முதல்வா போற்றி         180

In grace remove my guile, -praise!

In grace say to me ' Fear not,- Ō praise!

Poison became ambrosis by Thy love, -praise!

Father, -praise! Guru, -praise!

Eternal, -praise! Pure One, -praise! (175)

Brother, -praise! Existent One, -praise!

O Great One, -praise! O Lord, -praise!

O Rare One, -praise! O Pure One, -praise!

Glorious Path of Vedic sages, -praise!

I make my plaint, nor can endure, O First One, -praise! (180)

 

உறவே போற்றி உயிரே போற்றி
சிறவே போற்றி சிவமே போற்றி
மஞ்சா போற்றி மணாளா போற்றி
பஞ்சு ஏர் அடியான் பங்கா போற்றி
அலந்தேன் நாயேன் அடியேன் போற்றி 185
இலங்கு சுடர் எம் ஈசா போற்றி
சுவைத்தலை மேவிய கண்ணே போற்றி
குவைப்பதி மலிந்த கோவே போற்றி
மலை நாடு உடைய மன்னே போற்றி
கலை ஆர் அரிகேசரியாய் போற்றி         190

Kinsman, -praise! Life, -praise!

Glory, -praise! Bliss, -praise!

O Cloud, -praise! O Bridegroom, praise!

Spouse of Her whose feet are soft, -praise!

I, a cur, Thy slave am perplexed, -praise! (185)

Our Master Thou, all dazzling bright, -praise!

Eye apprehending forms diverse, -praise!

King, dwelling in the circling, sacred town, I praise!

Lord of the mountain land, -praise!

Thou in Whose locks is the crescent moon, -praise! (190)

 

திருக்கழுக் குன்றில் செல்வா போற்றி
பொருப்பு அமர் பூவணத்து அரனே போற்றி
அருவமும் உருவமும் ஆனாய் போற்றி
மருவிய கருணை மலையே போற்றி
துரியமும் இறந்த சுடரே போற்றி  195
தெரிவு அரிது ஆகிய தெளிவே போற்றி
தேளா முத்தச் சுடரே போற்றி
ஆள் ஆனவர்களுக்கு அன்பா போற்றி
ஆரா அமுதே அருளா போற்றி
பேர் ஆயிரம் உடைப் பெம்மான் போற்றி         200

Blessed Lord of the sacred Eagle-mount, -praise!

Aran of hilly Pūvanam, -praise!

Formless, in form revealed Thou art, -praise!

Mountain of mercy ever nigh, -praise!

Light transcending utmost bound, -praise! (195)

Clearness, hard to understand, -praise!

Ray of the flawless Gem, praise!

Loving to those Thou mak'et Thine own, -praise!

Ambrosial grace that satiates not, -praise!

Our Lord, the bearer of a thousand names, -praise! (200)

 

தாளி அறுகின் தாராய் போற்றி
நீள் ஒளி ஆகிய நிருத்தா போற்றி
சந்தனச் சாந்தின் சுந்தர போற்றி
சிந்தனைக்கு அரிய சிவமே போற்றி
மந்திர மாமலை மேயாய் போற்றி  205
எந்தமை உய்யக் கொள்வாய் போற்றி
புலிமுலை புல் வாய்க்கு அருளினை போற்றி
அலைகடல் மீ மிசை நடந்தாய் போற்றி
கரும் குருவிக்கு அன்று அருளினை போற்றி
இரும் புலன் புலர இசைந்தனை போற்றி         210

Thou Whose garland is the Tāli-arrugu, -praise!

Dancer in light expanding far, -praise!

O Beauteous with the sandal wood perfume, -praise!

Bliss, hard for thought to reach, -praise!

On Mandira's mighty mount Thou dwell'st, -praise! (205)

Thou Who dost undertake to save us, -praise!

Thou Who in grace didst give the tiger's dug to th' antelope, -praise!

Thou Who didst walk upon the billowy sea, -praise!

Thou didst give grace that day to the black bird, -praise!

Thou didst appear by sense discerned, -praise! (210)

 

படி உறப் பயின்ற பாவக போற்றி
அடியொடு நடு ஈறு ஆனாய் போற்றி
நரகொடு சுவர்க்க நானிலம் புகாமல்
பரகதி பாண்டியற்கு அருளினை போற்றி
ஒழவற நிறைந்த ஒருவ போற்றி  215
செழு மலர்ச் சிவபுரத்து அரசே போற்றி
கழு நீர் மாலைக் கடவுள் போற்றி
தொழுவார் மையல் துணிப்பாய் போற்றி
பிழைப்பு வாய்ப்பு ஒன்று அறியா நாயேன்
குழைத்த சொல்மாலை கொண்டருள் போற்றி         220

Fiery One on earth displayed, -praise!

Thou art the First, the Midst, the Last, -praise!

Hell, Paradise, or-pendant Earth not entering,

The heavenly goal Thou gav'st unto the Pāndiyan, -praise!

Thou that fillest all, to Thee be praise! (215)

King of Civa-puram rich with clustering flowers, to Thee be praise!

God, garlanded with purple lotus flower, to Thee be praise!

Thou dost cut off bewilderment of those that worship Thee, -praise!

Praise! Take in grace this wreath of babbling words

From me, mere cur, that know not to distinguish false from true ! (220)

 

புரம்பல் எரித்த புராண போற்றி
பரம் பரம் சோதிப் பரனே போற்றி
போற்றி போற்றி புயங்கப் பெருமான்
போற்றி போற்றி புராண காரண
போற்றி போற்றி சய சய போற்றி         225

Ancient of days Burner of many towns, -praise!

Infinite Lord of splendours infinite, -praise!

Praise! Praise! Bhuyanga-Perumān !

Praise! Praise! Ancient-cause of all !

Praise! Praise! Triumphant praise! (225)

திருச்சிற்றம்பலம்

Tirucciṛṛambalam