Tiruvasakam1.13 Presentation by Veeraswamy Krishnaraj |
|
13. (தில்லையில் அருளியது - நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா) திருப்பூவல்லி
- மாயா விசயம் நீக்குதல். From Madurai
Project |
Hymn XIII- tiru puvalli THE SACRED LILY-FLOWERS or TAKING THE VICTORY FROM MAYA Source: Shaivam.org G.U.Pope |
இணையார் திருவடி என்தலைமேல் வைத்தலுமே துணையான சுற்றங்கள் அத்தனையும் துறந்தொழிந்தேன் அணையார் புனற்றில்லை அம்பலத்தே ஆடுகின்ற புணையாளன் சீர்பாடிப் பூவல்லி கொய்யாமோ. 4 |
I. Renunciation of other help. His sacred Feet,- the twain,-soon as upon my head He placed, Help of encircling friends,- the whole,- I utterly renounced; In Tillai's court begirt with guarded streams, in mystic dance He moves. That Raftsman's glory SING, AND PLUCK THE LILY-FLOWERS! (4) |
எந்தையெந் தாய்சுற்றம் மற்றுமெல்லாம் என்னுடைய பந்தம் அறுந்தென்னை ஆண்டுகொண்ட பாண்டிப்பிரான் அந்த இடைமருதில் ஆனந்தத் தேனிருந்த பொந்தைப் பரவிநாம் பூவல்லி கொய்யாமோ. 8 |
II. Further experiences in Madyarjunam. From father, mother, kindered, and all else that were to me As bonds, He set me free; made me His own,- the Pandi-Lord! In Idai-maruthu, His dwelling, rapture's honey flowed. That sweet recess with song PRAISE WE, AND PLUCK THE LILY-FLOWERS! (8) |
நாயிற் கடைப்பட்ட நம்மையுமோர் பொருட்படுத்துத் தாயிற் பெரிதுங் தயாவுடைய தம்பொருமான் மாயப் பிறப்பறுந் தாண்டானென் வல்வினையின் வாயிற் பொடியட்டிப் பூவல்லி கொய்யாமோ. 12 |
III. Converting grace. Us too, than dogs more vile, of worth and note He made to be; With greater than a mother's tenderness, our Peruman Cut off 'illusive birth,' made us His own; our 'deeds' so strong Laid prostrate humbled in the dust; PLUCK WE THE LILY-FLOWERS! (12) |
பண்பட்ட தில்லைப் பதிக்காசைப் பரவாதே எண்பட்ட தக்கன் அருக்கன் எச்சன் இந்துஅனல் விண்பட்ட பூதப் படைவீர பத்திரரால் புணப்பட்ட வாபாடிப் பூவல்லி கொய்யாமோ. 16 |
IV. The Rebel-rout. They praised not the king of Tillai's town, 'mid well-tilled fields, Dakshan renown'd, and Arukkan, and Eccan, Moon, and Fire! By Vira-bhadra with his demon host that fill'd the sky, Sing how that day they suffer'd wounds; AND PLUCK THE LILY-FLOWERS! (16) |
தேனாடு கொன்றை சடைக்கணிந்த சிவபெருமான் ஊனாடி நாடிவந் துள்புகுந்தான் உலகர்முன்னே நானாடி ஆடிநின் றோலமிட நடம்பயிலும் வானாடர் கோவுக்கே பூவல்லி கொய்யாமோ. 20 |
V. Perun-turrai and Tillai.
Civan, the Lord, who on His 'lock' the honied cassia wears, Took fleshy form, sought me, and entering came; before the world That I may dance, and utter triumph songs, in dance He moves! For Him, King of heaven's sons, PLUCK WE THE LILY-FLOWERS! (20) |
எரிமூன்று தேவர்க் கிரங்கியருள் செய்தருளிச் சிரமூன் றறத்தன் திருப்புருவம் நெரித்தருளி உருமூன்று மாகி உணர்வரிதாம் ஒருவனுமே புரமூன் றெரத்தவா பூவல்லி கொய்யாமோ. 24 |
VI. The Triads. THREE fires He gave in gracious pity to the gods; THREE heads to sever fire He sent from sacred brow, in grace; THREE forms He wears, the Only-One, Incomprehensible; THREE rebel towns He burnt; so PLUCK THE LILY-FLOWERS! (24) |
வணங்கத் தலை வைத்து வார்கழல்வாய் வாழ்த்தவைத்து இணங்தத்தன் சீரடியார் கூட்டமும்வைத் தெம்பெருமான் அணங்கொடணிதில்லை அம்பலத்தே ஆடுகின்ற குணங் கூரப் பாடிநாம் பூவல்லி கொய்யாமோ. 28 |
VII. His gracious work. He made my head to bow; my mouth to laud His cinctured Foot He taught; gave me to join th'assemblage of His glorious saints; And with the Queen, in Tillai's court adorned, dances our Peruman. Sing we aloud His excellence, AND PLUCK THE LILY-FLOWERS! (28) |
நெறிசெய் தருளித்தன் சீரடியார் பொன்னடிக்கே குறிசெயது கொண்டென்னை ஆண்டபிரான் குணம்பரவி முறிசெய்து நம்மை முழுதுடற்றும் பழவினையைக் கிறிசெய்த வாபாடிபட பூவல்லி கொய்யாமோ. 32 |
VIII.
He taught the pathway to the golden Feet of His great saints, Praise ye the Master's grace that made me His and gave the sign! 'Old deeds' that made us wholly bond-slaves, sorely troubled us, Sing how He brought to naught; AND SO PLUCK WE THE LILY-FLOWERS! (32) |
பன்னாட் பரவிப் பணிசெய்யப் பாதமலர் என்ஆகம் துன்னவைத்த பெரியோன் எழிற்சுடராய்க் கல்நா ருரித்தென்னை யாண்டுகொண்டான் கழலிணைகள் பொன்னான வாபாடிப் பூவல்லி கொய்யாமோ. 36 |
IX.
That I might praise Him many a day, and service due perform, The Mighty-One His fragrant foot-flower on my frame impress'd; A beauteous Light He shone, softened my heart, and made me His! Sing how those jewell'd Feet are gold, AND PLUCK THE LILY-FLOWERS! (36) |
பேராசை யாமிந்தப் பிண்டமறப் பெருந்துறையான் சீரார் திருவடி யென் தலைமேல் வைத்தபிரான் காரார் கடல்நஞ்சை உண்டுகந்த காபாலி போரார் புறம்பாடிப் பூவல்லி கொய்யாமோ. 40 |
X.
That this my frame, mere mass of fierce desires, might pass away, Great Perun-turrai's Lord placed on my head His glorious Foot. KABALI,- Who, well pleased, black poison ate from out the sea, - Sing we, amidst His warring foes, AND PLUCK THE LILY-FLOWERS! (40) |
பாலும் அமுதமுந் தேனுடனாம் பராபரமாய்க் கோலங் குளிர்ந்துள்ளங் கொண்டபிரான் குரைகழல்கள் ஞாலம் பரவுவார் நன்னெறியாம் அந்நெறியே போலும் புகழ்பாடிப் பூவல்லி கொய்யாமோ. 44 |
XI
The BEING INFINITE, with every varied sweetness (Milk,
Ambrosia, Honey) filled; The LORD, Who took my soul in joyous pomp; His sounding Feet All dwellers in the world shall praise! That is the way of good! That way sing we His glory now, AND PLUCK THE LILY-FLOWERS! (44) |
வானவன் மாலயன் மற்றுமுள்ள தேவர்கட்கும் கோனவ னாய் நின்று கூடலிலாக் குணங்குறியோன் ஆன நெடுங்கடல் ஆலாலம் அமுதுசெய்யப் போனகம் ஆனவா பூவல்லி கொய்யாமோ. 48 |
XII.
Heaven's Lord, and Mal, and Ayan, and the other gods He rules As King, with attributes and signs that none may e'er attain; The fiery poison from the vasty sea, He made His food Ambrosia; and thus sing we, AND PLUCK THE LILY-FLOWERS! (48) |
அன்றால நீழற்கீழ் அருமறைகள் தானருளி நன்றாக வானவர் மாமுனிவர் நாள்தோறும் நின்றார ஏத்தும் நிறைகழலோள் புனைகொன்றைப் பொன்தாது பாடிநாம் பூவல்லி கொய்யாமோ. 52 |
XIII.
That day, beneath the banyan's shade, in grace the Vedas rare He gave; the heavenly ones and mighty saints, each day, stood round, And praised Him of the perfect Foot with cassia-flower adorn'd; Its golden petal's dust sing we, AND PLUCK THE LILY-FLOWERS! (52) |
படமாக என்னுள்ளே தன்னிணைப்போ தவையளித்திங் கிடமாகக் கொண்டிருந் தேகம்பம் மேயபிரான் தடமார் மதில்தில்லை அம்பலமே தானிடமா நடமாடு மாபாடிப் பூவல்லி கொய்யாமோ. 56 |
XIV.
Fair pictured in my soul His Feet's twin flowers in grace He gave;
The Lord, Who in Ekambam dwells, made here His chosen seat; In Tillai's sacred court, girt by wide walls, is now His home; Sing how in mystic dance He moves, AND PLUCK THE LILY-FLOWERS! (56) |
அங்கி அருக்கன் இராவணன் அந்தகன் கூற்றன் செங்கண் அரிஅயன் இந்திரனுஞ் சந்திரனும் பங்கமில் தக்கனும் எச்சனுந்தம் பரிசழியப் பொங்கியசீர் பாடிநாம் பூவல்லி கொய்யாமோ. 60 |
XV. Dakshan's sacrifice. Fire and the Sun, and Ravanan, and Andhagan, and Death, With red-ey'd Hari, Ayan, Indra, and the Moon-god too, And shameless Dakshan and the Eccan: these their honour lost! Singing His swelling glory now, PLUCK WE THE LILY-FLOWERS! (60) |
திண்போர் விடையான் சிவபுரத்தார் போரேறு மண்பால் மதுரையிற் பிட்டமுது செய்தருளித் தண்டாலே பாண்டியன் தன்னைப் பணிகொண்ட புண்பாடல் பாடிநாம் பூவல்லி கொய்யாமோ. 64 |
XVI.
The strong bull's Rider; Champion brave of those of Civa-town; In Madura, earth-carrier; in grace He ate the cakes; Was smitten by the Pandiyan's staff, who claimed His service there. Sing the song of the wound He bore, AND PLUCK THE LILY-FLOWERS! (64) |
முன்னாய மாலயனும் வானவரும் தானவரும் பொன்னார் திருவடி தாமறியார் போற்றுவதே என்னாகம் உள்புகுந் தாண்டு கொண்டான் இலங்கணியாம் பன்னாகம் பாடிநாம் பூவல்லி கொய்யாமோ. 68 |
XVII. The ancient Mal, Ayan, the heavenly ones, the Danavar,
Knew not His sacred golden Foot, but joined in praise! Entering within my breast, He made me His! His ornament The gleaming serpent SING WE THUS, AND PLUCK THE LILY-FLOWERS! (68) |
சீரார் திருவடித் திண்சிலம்பு சிலம்பொலிக்கே ஆராத ஆசையதாய் அடியேன் அகமகிழத் தேராந்த வீதிப் பெருந்துறையான் திருநடஞ்செய் பேரானந் தம்பாடிப் பூவல்லி கொய்யாமோ. 72 |
XVIII.
That with desire insatiate my soul might ever joy At sound of tinkling anklets on His glorious sacred Foot, In dance He moves,- the Lord of Perun-turrai's car-thronged streets. This mighty rapture chaunting loud, PLUCK WE THE LILY-FLOWERS! (72) |
அத்தி யுரித்தது போர்த்தருளும் பெருந்துறையான் பித்த வடிவுகொண் டிவ்வுலகிற் பிள்ளையுமாம் முத்தி முழுமுதலுத் தரகோச மங்கைவள்ளல் புத்தி புகுந்தவா பூவல்லி கொய்யாமோ. 76 |
XIX.
The Perun-turrai-Lord, Who wears the hide of elephant;
Who took a madman's form;- Who in this world became a child; Source of all heavenly bliss; great Uttara-koca-mangai's Prince; As in our minds He entering cam, PLUCK WE THE LILY-FLOWERS! (76) |
5
________________________________________