திவ்யப் பிரபந்தம்   Divyaprabhandham By Alvars on Narayana (Vishnu)

பெரியாழ்வார் திருமொழி  திருப்பல்லாண்டு

Periyāzhvār Tiruppallāndu (A benediction of longevity)

Translation: Srirama Bharati

காப்பு  Invocation
குறள்வெண்செந்துறை
1.1-1:
1. பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா. உன்
செவ்வடிசெவ்விதிருக்காப்பு. 1.1.1

 

(A benediction of longevity)

1. Many years, many years, many thousands of years, and many hundred thousands more. Gem-hued Lord with mighty wrestling shoulders, your red lotus feet are our refuge. 1.1.1 (0001)

2:
அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம்பல்லாண்டு
வடிவாய் நின் வலமார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு
வடிவார் சோதி வலத்துறையும் சுடர் ஆழியும் பல்லாண்டு
படைபோர் புக்கு முழங்கும் அப் பாஞ்சசன்னியமும் பல்லாண்டே. (2)

2 To the bond between us, many and many a thousand years. To the dainty lady resting on your manly chest, many and many a thousand years. To the fiery orb discus adorning your right shoulder, many and many a thousand years. To the conch Panchajanya that strikes terror in the battlefield, many and many a thousand years. 1.1.2 (0002)

3: வாழாட்பட்டு நின்றீருள்ளீரேல் வந்து மண்ணும் மணமும் கொண்மின்
கூழாட்பட்டு நின்றீர்களை எங்கள் குழுவினில் புகுதலொட்டோ ம்;
ஏழாட்காலும் பழிப்பிலோம் நாங்கள் இராக்கதர் வாழ்இலங்கை
பாழாளாகப் படைபொருதானுக்குப் பல்லாண்டு கூறுதமே. 1.1.3

3. You, the sufferers in life. Come and get the sacred earth and fragrance. We deny entry to the epicures in our midst. We are pure of sins for seven generations. Pallandu (Zillion years) to the destroyer of Lanka, the abode of demons (and Ravana). 1.1.3 (0003)

4. ஏடுநிலத்தில் இடுவதன் முன்னம் வந்து எங்கள் குழாம் புகுந்து
கூடு மனமுடையீர்கள் வரம் பொழிவந்து ஒல்லைக்கூடுமினோ
நாடும் நகரமும் நன்கறிய நமோநாராயணாய வென்று
பாடுமனமுடைப் பத்தருள்ளீர். வந்து பல்லாண்டு கூறுமினே. 1.1.4

4. Before you are interred into the burial ground, join our group, O the like-minded, to enjoy the bliss. Let the town and country resound with the sound of Namo Narayanaya, O the devotees with the penchant to sing (His glory). Come and sing the Pallandu. 1.1.4

5:   அண்டக் குலத்துக் கதிபதியாகி அசுரர் இராக்கதரை
இண்டைக் குலத்தை எடுத்துக்களைந்த இருடீகேசன் தனக்கு
தொண்டக்குலத்தில் உள்ளீர். வந்தடிதொழுது ஆயிர நாமம் சொல்லி
பண்டைக் குலத்தைத் தவிர்ந்து பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு என்மினே. 1.1.5.

5. Irudikesan (Hrsikesa = हृषीकेश = hṛṣīkeśa. (having his hair erect), ep. of Viṣṇu-Kṛṣṇa) became the Lord of the Universe and eradicated the Asuras and Rāksasas, thick as a dense brush. O Devotee-slaves of Bhagavan, come and worship His feet and chant His thousand names. Give up the hubris of high and sing Pallandu. 1.1.5

6 எந்தை தந்தை தந்தை தந்தை தம் மூத்தப்பன் ஏழ்படிகால் தொடங்கி
வந்து வழிவழி ஆட்செய்கின்றோம்; திருவோணத் திருவிழவில்
அந்தியம் போதில் அரியுரு வாகி அரியை அழித்தவனை
பந்தனை தீரப் பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு என்று பாடுதமே. 6.

 

 

6. My father, his father’s father, and grandfather before him, well over seven generations, rendered service to Bhagavan. In Asterism of Sravanam, at dusk, He took the form of Man-Lion and destroyed the enemy. To expiate and obtain release from the bondage (the sin of murder), let us sing Pallandu Pallayiraththāndu. (அரி = ari = enemy; lion.) 1.1.6

7தீயிற் பொலிகின்ற செஞ்சுடர் ஆழி திகழ் திருச்சக்கரத்தின்
கோயிற் பொறியாலே ஒற்றுண்டு நின்று குடிகுடி ஆட்செய்கின்றோம்
மாயப் பொருபடை வாணனை ஆயிரந்தோளும் பொழி குருதி
பாயச் சுழற்றிய ஆழி வல்லானுக்குப் பல்லாண்டு கூறுதுமே. 7.


7. We are branded with the radiant fiery sacred discus and serve Bhagavan over many generations. He deployed His discus on illusory Vāṇan, ripped his thousand shoulders wherefrom the blood ran (like a river). To that Discus Wielder, let us chant Pallandu. 1.1.7

8நெய்யிடை நல்லதோர் சோறும் நியதமும் அத்தாணிச் சேவகமும்
கை அடைக்காயும் கழுத்துக்குப் பூணொடு காதுக்குக் குண்டலமும்
மெய்யிட நல்லதோர் சாந்தமும் தந்து என்னை வெள்ளுயிர் ஆக்கவல்ல
பையுடை நாகப்பகைக் கொடியானுக்குப் பல்லாண்டு கூறுவனே. 8.

8. Bhagavan bestows on me, Butter-rice, the opportunity to do service, Pan-supari, ornaments for the neck and ears, and Sandalwood paste to smear. Bhagavan, whose banner is Garuda, which kills the enemy-snakes, ensures good conduct in me. To that flag-holder, I sing Pallandu. 1.1.8                     

9உடுத்துக் களைந்த நின் பீதக ஆடை யுடுத்துக் கலத்ததுண்டு
தொடுத்த துழாய்மலர் சூடிக் களைந்தன சூடுமித் தொண்டர்களோம்
விடுத்த திசைக்கருமம் திருத்தித் திருவோணத் திருவிழவில்
படுத்த பைந் நாகணைப் பள்ளி கொண்டானுக்குப் பல்லாண்டு கூறுதுமே. 9.

9. O Lord, we wear your discarded yellow clothes, eat the food left over after offerings to you, and rejoice ourselves by wearing Tulsi (Sacred basil) garlands worn and discarded by you. We the toṇṭars (Devotee-Slaves) chant Pallandu on the sacred day of Tiruvonam, as You rest on the coils of the five-hooded snake. 1.1.9

10.எந்நாள் எம்பெருமான் உன்தனக்கு அடியோமென்று எழுத்துப்பட்ட
அந்நாளே அடியோங்கள் அடிக்குடில் வீடுபெற்று உய்ந்தது காண்
செந்நாள் தோற்றித் திருமதுரையுள் சிலை குனித்து  ஐந்தலைய
பைந்நாகத்தலை பாய்ந்தவனே. உன்னைப் பல்லாண்டு கூறுதுமே. 10.

10. The day, Emperuman declared us His vassals, is the very day we the servitors at your feet through generations past attained liberation. On the auspicious day of Tiruvonam, You made an appearance in the sacred city of Mathura, destroyed the arsenal (of Kamsa), and danced on the five-hooded snake (named Kalia). I chant the Pallandu. 1.1.10

11. அல்வழக்கு ஒன்றுமில்லா அணிகோட்டியர் கோன் அபிமானதுங்கன்
செல்வனைப் போல திருமாலே. நானும் உனக்குப் பழவடியேன்
நல்வகையால் நமோ நாராயணா வென்று நாமம் பல பரவி
பல்வகையாலும் பவித்திரனே. உன்னைப் பல்லாண்டு கூறுவனே. (2) 11.

11. O Tirumal, I am your servitor from yore like the faultless Kottiyur Selva Nambi. To cultivate a mind of desirelessness, I chant your many names like Namo Narayana. O the Pure, I chant Pallandu. 1.1.11

 

12. பல்லாண்டென்று பவித்திரனைப் பரமேட்டியை சார்ங்கம் என்னும்
வில்லாண்டான் தன்னை வில்லிபுத்தூர் விட்டு சித்தன் விரும்பிய சொல்
நல்லாண்டென்று நவின்றுரைப்பார் நமோநாராயணாய வென்று
பல்லாண்டும் பரமாத்மனைச் சூழ்ந்திருந்து ஏத்துவர் பல்லாண்டே. (2) 12.

12. The Pallandu-fame pure One is the Wielder of Sarangam bow. Villiputtur Chittan spoke these sweet words with love, saying this was a good year for them too. The servitors, singing and chanting Namo Narayanaya surround and praise the Paramatman and chant Pallandu. 1.1.12                                                                                                                                                   

பெரியாழ்வார் திருமொழி
முதற்பத்து
முதல் திருமொழி - வண்ண மாடங்கள்
(கண்ணன் திருவவதாரச் சிறப்பு)  கலிவிருத்தம்

 

 

1.2 / The Birth of Sri Krishna

13. வண்ணமாடங்கள்சூழ் திருக்கோட்டியூர்
கண்ணன்கேசவன் நம்பிபிறந்தினில்
எண்ணெய்சுண்ணம் எதிரெதிர்தூவிடக்
கண்ணன்முற்றம் கலந்துஅளராயிற்றே.

13. When the lord Sri Krishna Kesava was born in Tirukkottiyur of beautiful mansions, they spilled oil and turmeric powder on one another, slushing the portico of Krishna’s house. (2.1)

14. ஓடுவார்விழுவார் உகந்தாலிப்பார்
நாடுவார்நம்பிரான் எங்குத்தானென்பார்
பாடுவார்களும் பல்பறைகொட்டநின்று
ஆடுவார்களும் ஆயிற்றுஆய்ப்பாடியே.

14. They ran and fell, then rose and greeted joyously, asking, “Where is our lord?” Singers, dancers, and drummers everywhere thronged the cowherds’ hamlet.  2.2

15:
பேணிச்சீருடைப் பிள்ளைபிறந்தினில்
காணத்தாம்புகுவார் புக்குப்போதுவார்
ஆணொப்பார் இவன்நேரில்லைகாண் திரு
வோணத்தா நுலகாளுமென்பார்களே.

15. Soon after the protected child was born, they poured into the nursery to see him and came out saying, “He has no match!", “He shall rule the Earth!", “Tiruvonam is his star! 2.3

16: உறியைமுற்றத்து உருட்டிநின்றாடுவார்
நறுநெய்பால்தயிர் நன்றாகத்தூவுவார்
செறிமென்கூந்தல் அவிழத்திளைத்து எங்கும்
அறிவழிந்தனர் ஆய்ப்பாடியரே.

16. The cowherd-folk poured out good milk, curds, and Ghee from the rope-shelf, overturned the empty pots in the portico, and danced on them, tossing their disheveled hair, and lost their minds.

2.4

17: கொண்டதாளுறி கோலக்கொடுமழு
தண்டினர் பறியோலைச் சயனத்தர்
விண்டமுல்லை யரும்பன்னபல்லினர்
அண்டர்மிண்டிப்புகுந்து நெய்யாடினார்.

17. Forest-dwellers came pouring in, with teeth as white as the fresh Mullai blossom, wearing woven bark cloth, carrying a staff, an ax, and a sleeping mat woven from screw pine fiber; they smeared themselves with Ghee and danced. 2.5

18: கையும்காலும்நிமிர்த்துக் கடாரநீர்
பையவாட்டிப் பசுஞ்சிறுமஞ்சளால்
ஐயநாவழித்தாளுக்கு அங்காந்திட
வையமேழும்கண்டாள் பிள்ளைவாயுளே.

18. She washed her child in a bathtub, gently stretching his arms and legs. Then she opened his mouth to clean the tongue with a piece of tender turmeric and saw the seven worlds in his gaping mouth. 2.6

19: வாயுள்வையகம்கண்ட மடநல்லார்
ஆயர்புத்திரனல்லன் அருந்தெய்வம்
பாயசீருடைப் பண்புடைப்பாலகன்
மாயனென்று மகிழ்ந்தனர்மாதரே.

19. When the other good ladies saw the Universe in his mouth, they exclaimed with glee, “this is no ordinary cowherd-child, but the blessed lord himself, endowed with all the auspicious qualities.” (2.7)

20: பத்துநாளும்கடந்த இரண்டாநாள்
எத்திசையும் சயமரம்கோடித்து
மத்தமாமலை தாங்கியமைந்தனை
உத்தானம்செய்து உகந்தனர்ஆயரே.

20. After ten days and two, the cowherds erected festooned pillars on all four sides and then lifted the child from the cradle, singing “The-prince-who- lifted-the-wild elephants-mountain- against-a-hailstorm!” 2.8

21: கிடக்கில் தொட்டில்கிழியஉதைத்திடும்
எடுத்துக்கொள்ளில் மருங்கையிறுத்திடும்
ஒடுக்கிப்புல்கில் உதரத்தேபாய்ந்திடும்
மிடுக்கிலாமையால் நான்மெலிந்தேன்நங்காய்.

21. Lay him in the cradle, and he kicks as it would break; take him to the waist, and he clings like a wrench; hold him in front, and he trounces the belly. I can bear it no more. Ladies, I am exhausted! (2. 9)

22: செந்நெலார்வயல்சூழ் திருக்கோட்டியூர்
மன்னுநாரணன் நம்பிபிறந்தமை
மின்னுநூல் விட்டுசித்தன்விரித்த இப்
பன்னுபாடல்வல்லார்க்கு இல்லைபாவமே.

22. These sweet songs of Vishnuchittar, who wears the bright Vedic thread, speak of the birth of the eternal lord Narayana in famed Tirukkottiyur, surrounded by fertile paddy fields. Those who master it will gather no sin. (2

 

 Toe to head adoration of Krishna

23: சீதக்கடல் உள்ளமுதன்னதேவகி
கோதைக்குழலாள் அசோதைக்குப்போத்தந்த
பேதைக்குழவி பிடித்துச்சுவைத்துண்ணும்
பாதக்கமலங்கள் காணீரே
பவளவாயீர். வந்துகாணீரே.

23.  O, coral-lipped ladies, come here and see. He is the darling child which nectar-sweet Devaki gave to the coiffured dame Yasoda. See the innocent child grab his foot and suck his toe!

24: முத்தும்மணியும் வயிரமும்நன்பொன்னும்
தத்திப்பதித்துத் தலைப்பெய்தாற்போல் எங்கும்
பத்துவிரலும் மணிவண்ணன்பாதங்கள்
ஒத்திட்டிருந்தவா காணீரே
ஒண்ணுதலீர். வந்துகாணீரே.

24. Bright forehead Ladies, come here and see the gem-hued lord’s feet, full with ten little toes like pearls, garnets, and diamonds set in gold all over.

25: பணைத்தோளிளவாய்ச்சி பால்பாய்ந்தகொங்கை
அணைத்தாரஉண்டு கிடந்தஇப்பிள்ளை
இணைக்காலில் வெள்ளித்தளைநின்றிலங்கும்
கணைக்கால்இருந்தவாகாணீரே
காரிகையீர். வந்துகாணீரே.

25. Beautiful Ladies, come here and see, this child sleeps after sucking from the milk-laden breasts of a young slender Gopi of bamboo-like arms. His two feet are adorned with silver anklets.

26: உழந்தாள்நறுநெய் ஓரோர்தடாவுண்ண
இழந்தாளெரிவினாலீர்த்து எழில்மத்தின்
பழந்தாம்பாலோச்சப் பயத்தால்தவழ்ந்தான்
முழந்தாள்இருந்தவாகாணீரே
முகிழ்முலையீர். வந்துகாணீரே. 4.

26. Full-breasted Ladies, come here and see the beautiful knees of this child. He ate the butter from every pot. so painstakingly collected by his unfortunate mother and incurred her wrath. When she pulled him up and threatened him with a churning rope, he cringed away in fear!

27: பிறங்கியபேய்ச்சி முலைசுவைத்துண்டிட்டு
உறங்குவான்போலேகிடந்த இப்பிள்ளை
மறங்கொளிரணியன் மார்பைமுன்கீண்டான்
குறங்குவளைவந்துகாணீரே
குவிமுலையீர். வந்துகாணீரே. 5.

27. Ladies of risen breasts, come here and see the thighs of this child, who drained the bright ogress Putana's breasts with relish and lay like a sleeping child. Long ago, he tore apart the hate-filled chest of Hiranya Kasipu.

28: மத்தக்களிற்று வசுதேவர்தம்முடை
சித்தம்பிரியாத தேவகிதன்வயிற்றில்
அத்தத்தின்பத்தாநாள் தோன்றியஅச்சுதன்
முத்தமிருந்தவாகாணீரே   (முத்தம்  = lip Tamil Lexicon))
முகிழ்நகையீர். வந்துகாணீரே.

28. Softly smiling Ladies, come here and see the lip of this child Achyuta, born on the tenth day from Hastam, front the womb of Devaki, dear to Vasudev who owns might}- elephants.

 

29: இருங்கைமதகளிறு ஈர்க்கின்றவனை
பருங்கிப்பறித்துக்கொண்டு ஓடுபரமன்தன்
நெருங்குபவளமும் நேர்நாணும்முத்தும்
மருங்கும்இருந்தவாகாணீரே
வாணுதலீர். வந்துகாணீரே.

29. Bright forehead Ladies, come here and see the waist-lace of this child, threaded with corals and pearls, as he runs dragging a killed rut-elephant by its trunk.

30: வந்தமதலைக்குழாத்தை வலிசெய்து
தந்தக்களிறுபோல் தானேவிளையாடும்
நந்தன்மதலைக்கு நன்றுமழகிய
உந்திஇருந்தவாகாணீரே
ஒளியிழையீர். வந்துகாணீரே. 8.

30. Bright-jeweled Ladies, come here and see the perfectly beautiful navel of this child born to Nandagopa; like an elephant he plays with himself, ignoring the teams of children who have come to play.

31: அதிரும்கடல்நிறவண்ணனை ஆய்ச்சி
மதுரமுலையூட்டி வஞ்சித்துவைத்த
பதரப்படாமே பழந்தாம்பாலார்த்த
உதரம்இருந்தவா காணீரே
ஒளிவளையீர். வந்துகாணீரே.

31. Bright-bangled Ladies, come here and see the beautiful radiant stomach of the dark ocean-hued lord. His mother gave him a sweet suck, then stealthily bound him with an old rope without rousing him.

32: பெருமாவுரலில் பிணிப்புண்டிருந்து அங்கு
இருமாமருதம் இறுத்தஇப்பிள்ளை
குருமாமணிப்பூண் குலாவித்திகழும்
திருமார்புஇருந்தவாகாணீரே
சேயிழையீர். வந்துகாணீரே.

32. Bright-jeweled Ladies, come here and see the radiant chest of this child adorned with a dazzling pendant. Tethered to a huge mortar, lie crawled between the twin Arjuna trees and broke them.

33: நாள்களோர்நாலைந்து திங்களளவிலே
தாளைநிமிர்த்துச் சகடத்தைச்சாடிப்போய்
வாள்கொள்வளையெயிற்று ஆருயிர்வவ்வினான்
தோள்கள்இருந்தவாகாணீரே
சுரிகுழலீர். வந்துகாணீரே.

33. O Ladies with curly locks, come here and see the arms of this child. About four or five months old, he smote the devilish cart and sucked the life out of the brightly smiling ogress Putana.

34: மைத தடங்கண்ணி யசோதை வளர்க்கின்ற
செய்த்தலை நீல நிறத்துச் சிறுப்பிள்ளை
நெய்த்தலை நேமியும் சங்கும் நிலாவிய
கைத்தலங்கள் வந்து காணீரே !
கனங்குழையீர். வந்துகாணீரே.

34. O Ladies wearing beautiful earrings, come here and see. This dark-hued child is a tender blossom in Kajal-lined wide-eyed Yasoda’s Garden. These here are hands that hold a sharp discus and conch.

35: வண்டு அமர் பூங்குழல் ஆய்ச்சி மகனாகக்
கொண்டு வளர்க்கின்ற கோவலக் குட்டற்கு
அண்டமும் நாடும் அடங்க  விழுங்கிய
கண்டம் இருந்தவா காணீரே
காரிகையீர்! வந்து காணீரே.

35. O Beautiful Ladies, come here and see. The cowherd-child whom the bee-humming flower-coiffured dame Yasoda bring up as her own son, swallowed the Universe and all the worlds in it. O see his beautiful neck.

36: ம் தொண்டைவாய்ச்சிங்கம் வான்று எடுத்துக்கொண்டு
அந்தொண்டை வாய் அமுது ஆதரித்து ஆய்ச்சியர்
தம் தொண்டை வாயால் தருக்கிப் பருகும்  இச்
செந்தொண்டை வாய் வந்து காணீரே
சேயிழையீர்! வந்துகாணீரே!

36. O Ladies wearing gem-set jewels, come here and see! Amorous cowherd girls lift this child saying, “Come, my lion cub,'' Press him against their coral lips and drink the sap that oozes from his red berry lips.

37: நோக்கி யசோதை நுணுக்கிய மஞ்சளால்
நாக்கு வழித்து நீராட்டும்இந் நம்பிக்கு
வாக்கும் நயனமும் வாயும் முறுவலும்
மூக்கும் இருந்த வாகாணீரே
மொய்குழலீர்! வந்துகாணீரே.

37. O Ladies with dense coiffure, come here and see. With freshly ground turmeric, Yasoda carefully bathes the child and cleans his tongue. See his eyes, nose, mouth, and smile.

 

 

38. விண் கொள் அமரர்கள் வேதனை தீர* முன்

மண் கொள் வசுதேவர் தம் மகனாய் வந்து   

திண் கொள் அசுரரைத் தேய வளர்கின்றான்

கண்கள் இருந்தவா காணீரே,   

கனவளையீர்! வந்து காணீரே! 

38. O Gold-bangled Ladies, come here and see. To end the miseries of the gods in heaven, he has taken birth on Earth as Vasudev's child and grows up destroying mighty Asuras. See his eyes.

39. பருவம் நிரம்பாமே பாரெல்லாம் உய்ய

திருவின் வடிவு ஒக்கும் தேவகி பெற்ற

உருவு கரிய ஒளி மணிவண்ணன்

புருவம் இருந்தவா காணீரே,

பூண்முலையீர்! வந்து காணீரே!

39. O Jewel-breasted Ladies, come here and see. This child whom Lakshmi-like Devaki begot, has a dark frame like a radiant black gem. Even before coming of age, he delivers the whole world. See his shapely eyebrows. (17)

40. மண்ணும் மலையும் கடலும் உலகு ஏழும்

உண்ணும் திறத்து மகிழ்ந்து உண்ணும் பிள்ளைக்கு

வண்ணம் எழில்கொள் மகரக் குழை இவை

திண்ணம் இருந்தவா காணீரே,

சேயிழையீர்! வந்து காணீரே!     

40. O Jeweled Ladies, come here and see the well-made Makara- like golden earrings of this child. During Pralaya he gorges himself joyously with the seven worlds, the seven lands, the seven mountains, and the seven oceans. (18)

41. முற்றிலும் தூதையும் முன் கைம்மேல் பூவையும்

சிற்றில் இழைத்துத் திரிதரு வோர்களைப்

பற்றிப் பறித்துக் கொண்டு ஓடும் பரமன்தன்

நெற்றி இருந்தவா காணீரே,

நேரிழையீர்! வந்து காணீரே!

41. O Ladies with excellent jewels, come here and see the forehead of the lord. He snatches the winnow plates, pots, and Palm-leaf dolls from girls playing ‘house’ in the sand, and runs away.

42. அழகிய பைம்பொன்னின் கோல் அங்கைக் கொண்டு

கழல்கள் சதங்கை கலந்து எங்கும் ஆர்ப்ப

மழ கன்றினங்கள் மறித்துத் திரிவான்

குழல்கள் இருந்தவா காணீரே,

குவிமுலையீர்! வந்து காணீரே!

42. O Full-breasted Ladies, come here and see the curly locks of this child. He rounds up a herd of young calves and goes roaming with a golden staff in his beautiful hands, his sandals and his anklets striking a merry jingle.

43.  சுருப்பார் குழலி யசோதை முன் சொன்ன

திருப்பாத கேசத்தைத் தென் புதுவைப்பட்டன்

விருப்பால் உரைத்த இருபதோடு ஒன்றும்

உரைப்பார் போய்* வைகுந்தத்து ஒன்றுவர் தாமே.

43. These twenty-one songs by Pattarbiran of Puduvai fame recall the foot-to-head adoration of Krishna by Yasoda of yore. Those who sing it will go and live in Vaikunta.

  44. மாணிக்கம் கட்டி வயிரம் இடைகட்டி

ஆணிப் பொன்னால் செய்த வண்ணச் சிறுத்தொட்டில்

பேணி உனக்குப் பிரமன் விடுதந்தான்

மாணிக் குறளனே! தாலேலோ!

வையம் அளந்தானே! தாலேலோ!

44. O, Naked manikin, Talelo, —Brahma has sent you this little golden cradle studded with rubies and diamonds, — You measured the Earth, Talelo.

45. உடையார் கனமணியோடு ஒண் மாதுளம்பூ

இடை விரவிக் கோத்த எழில் தெழ்கினோடு

விடை ஏறு காபாலி ஈசன் விடுதந்தான்

உடையாய்! அழேல் அழேல் தாலேலோ!

உலகம் அளந்தானே! தாலேலோ!  

45. The buffalo-rider Siva has sent you this girdle of golden beads alternating with beautiful pear-shaped drops, perfectly befitting your waist. O, My Master, don’t cry, don’t cry, Talelo. You measured the Earth, Talelo.

46. என் தம்பிரானார் எழில் திருமார்வர்க்குச்

சந்தம் அழகிய தாமரைத் தாளர்க்கு

இந்திரன் தானும் எழில் உடைக் கிண்கிணி

தந்து உவனாய் நின்றான் தாலேலோ!

தாமரைக் கண்ணனே! தாலேலோ! 

46. For my master of the radiant chest and beautiful lotus feet, Indra gave these ankle-bells and stands betwixt, Talelo. O, Lotus-eyed Lord, Talelo.

47. சங்கின் வலம்புரியும் சேவடிக் கிண்கிணியும் 

அங்கைச் சரிவளையும் நாணும் அரைத்தொடரும் 

அங்கண் விசும்பில் அமரர்கள் போத்தந்தார்

செங்கண் கருமுகிலே! தாலேலோ

தேவகி சிங்கமே! தாலேலோ!

47. Gods of the wide sky have sent these jewels of dextral conch, anklets, tangles, chains, and waist thread. O, Red-eyed cloud-hued Lord, Talelo. O, Devaki’s lion cub, Talelo.

48. எழில் ஆர் திருமார்வுக்கு ஏற்கும் இவை என்று

அழகிய ஐம்படையும் ஆரமும் கொண்டு

வழு இல் கொடையான் வயிச்சிரவணன்

தொழுது உவனாய் நின்றான் தாலேலோ!

தூமணி வண்ணனே! தாலேலோ! 

48. The generous Vaisravana, lord of the Northern Quarter stands betwixt with folded hands, offering a necklace of charms shaped like Vishnu's five weapons, — conch, discus, dagger, mace, and bow, — befitting your radiant chest, Talelo. O, Faultless gem-hued Lord, Talelo.

49. ஓதக் கடலின் ஒளி முத்தின் ஆரமும்

சாதிப் பவளமும் சந்தச் சரிவளையும்

மா தக்க என்று வருணன் விடுதந்தான்

சோதிச் சுடர்முடியாய்! தாலேலோ

சுந்தரத் தோளனே! தாலேலோ! 

49. Varuna has sent a perfectly matching set of bangles and bracelets set with prized corals and a string of lustrous pearls from the deep ocean. O, Radiant-crowned Lord, Talelo. Lord with beautiful arms, Talelo.

50. கான் ஆர் நறுந்துழாய் கைசெய்த கண்ணியும்

வான் ஆர் செழுஞ்சோலைக் கற்பகத்தின் வாசிகையும்

தேன் ஆர் மலர் மேல் திருமங்கைபோத் தந்தாள்

கோனே! அழேல் அழேல் தாலேலோ!

குடந்தைக் கிடந்தானே! தாலேலோ! 

50. Goddess Lakshmi seated on a nectarous lotus has sent a garland of fresh Tulasi sprigs, and a wreath of Karpakam flowers picked from bowers rising sky-high. My Liege (feudal lord), don’t cry, don’t cry, Talelo. Lord reclining in Kudandai, Talelo.

August 27.2022  

51. கச்சொடு பொற்சுரிகை காம்பு கனவளை

உச்சி மணிச்சுட்டி ஒண்தாள் நிரைப் பொற்பூ

அச்சுதனுக்கு என்று அவனியாள் போத்தந்தாள்

நச்சுமுலை உண்டாய்! தாலேலோ!

நாராயணா! அழேல் தாலேலோ!

51. Goddess Earth has sent a golden diaper pin, golden bangles, a jewel-studded forehead pendant, and a hairpin with flowers of gold marked, ‘For Achyuta'. O, Child who sucked the poisoned breast, Talelo. Narayana, don’t cry, Talelo.

52. மெய் திமிரும் நானப் பொடியோடு மஞ்சளும்

செய்ய தடங்கண்ணுக்கு அஞ்சனமும் சிந்தூரமும்

வெய்ய கலைப்பாகி கொண்டு உவளாய் நின்றாள்

ஐயா! அழேல் அழேல், தாலேலோ!

அரங்கத்து அணையானே! தாலேலோ!

52. The deer-riding goddess Parvati stands betwixt, with gifts of refreshing bath fragrance and turmeric powder, collyrium for your large lotus eyes, and vermillion power. O, Sir don’t cry, don’t cry, Talelo. Lord reclining on a serpent in Tiru Arangam, Talelo.

53. வஞ்சனையால் வந்த பேய்ச்சி முலை உண்ட

அஞ்சன வண்ணனை ஆய்ச்சி தாலாட்டிய

செஞ்சொல் மறையவர் சேர் புதுவைப்பட்டன் சொல்

எஞ்சாமை வல்லவர்க்கு இல்லை இடர் தானே.

53. This decad by Pattarbiran of Puduvai fame, where pure-tongued Vedic seers live, recalls the Talattu of Yasoda sung for the dark-hued lord who drank the deceitful ogress Putana’s breast. Those who recite it without fault will have no sorrow.

54. தன் முகத்துச் சுட்டி தூங்கத் தூங்கத் தவழ்ந்து போய்

பொன்முகக் கிண்கிணி ஆர்ப்பப் புழுதி அளைகின்றான்

என் மகன் கோவிந்தன் கூத்தினை இள மா மதீ

நின் முகம் கண்ணுள ஆகில் நீ இங்கே நோக்கிப்போ.

54. O, Tender Moon! If you have eyes on your face, come and see my child Govinda’s pranks as he crawls, kicking up dust. His forehead pendant sways, and his golden anklet jingles.

55. என் சிறுக்குட்டன் எனக்கு ஓர் இன்னமுது எம்பிரான்

தன் சிறுக் கைகளால் காட்டிக்காட்டி அழைக்கின்றான்

அஞ்சன வண்ணனோடு ஆடல் ஆட உறுதியேல்

மஞ்சில் மறையாதே மா மதீ! மகிழ்ந்து ஓடிவா.

55. O, Great Moon! My dark-hued little child, my sweet ambrosia, my master calls, and beckons to you with his wee hands. If you wish to play with him, do not hide behind the clouds. Come running here happily.

56. சுற்றும் ஒளிவட்டம் சூழ்ந்து சோதி பரந்து எங்கும்

எத்தனை செய்யிலும் என் மகன் முகம் நேரொவ்வாய்

வித்தகன் வேங்கட வாணன் உன்னை விளிக்கின்ற

கைத்தலம் நோவாமே, அம்புலீ! கடிது ஓடிவா.

56. O, Bright Moon with rounds of halo spreading light everywhere! With all that, you are no match for my son’s face. The wonder lord, the resident of Venkatam, calls. Come running quickly, lest you cause pain to his hand.

57. சக்கரக் கையன் தடங்கண்ணால் மலர விழித்து

ஒக்கலைமேல் இருந்து உன்னையே சுட்டிக் காட்டும், காண்

தக்கது அறிதியேல் சந்திரா! சலம் செய்யாதே

மக்கள் பெறாத மலடன் அல்லையேல் வா, கண்டாய்.

57. O, Full Moon! The discus-wielding lord with his large eyes opened wide, seated on my waist, points at you alone. Know what is proper, and do not deceive him. If you are not childless sterile (a barren woman), take note and come.

58. அழகிய வாயில் அமுத ஊறல் தெளிவுற

மழலை முற்றாத இளஞ்சொல்லால் உன்னைக் கூவுகின்றான்

குழகன் சிரீதரன் கூவக் கூவ, நீ போதியேல்

புழையில ஆகாதே நின் செவி, புகர் மா மதீ!

58. O, Big bright Moon! The adorable Sridhara with spittle dripping from his beautiful mouth, blabbers indistinctly, coos, and calls to you. If you go on ignoring his calls, would it not mean that your ears are without a bore (ear canals)?

59. தண்டொடு சக்கரம் சார்ங்கம் ஏந்தும் தடக்கையன்

கண் துயில்கொள்ளக் கருதிக் கொட்டாவி கொள்கின்றான்

உண்ட முலைப் பால் அறா கண்டாய் உறங்காவிடில்

விண்தனில் மன்னிய மா மதீ! விரைந்து ஓடி வா.

59. O, Big Moon set in the wide sky! The lord with mighty arms that hold the mace, discus, and, bow yawns as he goes to sleep. If he does not sleep, the breast milk he drank will not be digested, see! So come quickly! Make haste and come.

60. பாலகன் என்று பரிபவம் செய்யேல் பண்டு ஓர் நாள்

ஆலின் இலை வளர்ந்த சிறுக்கன் அவன் இவன்;

மேல் எழப் பாய்ந்து பிடித்துக்கொள்ளும் வெகுளுமேல்

மாலை மதியாதே மா மதீ! மகிழ்ந்து ஓடிவா.

60. O, Big Moon! Do not think he is a mere child. Then in the past, he swallowed the Universe and slept on a fig leaf, know it. If he gets angry, he can easily leap up and catch you. So cast aside your self-esteem and come on your own accord.