Text

Description automatically generated

Translation by Srirama Bharati  and Kausalya Hart.

Divyaprabhandam contents, verse numbers and Tamil- English Translation

 

Name of author

Works

verses in numbers

1 பெரியாழ்வார் திருப்பல்லண்டு 1
Ditto

திருமொழி

13-215

2

ஆண்டாள்

திருப்பாவை

216 - 504

 

Ditto

நாச்சியார்

505 - 646

3

குலசேகரர்

பெருமாள் திருமொழி

647 - 751

4

திருமழிசைப்பிரான்

திருச்சந்தவிருத்தம்

752 - 871

5

தொண்டரடிப்பொடிகள்

திருமலை

872 - 916

 

Ditto

திருப்பள்ளி எழுச்சி

917 - 926

6

திருபாணாழ்வார்

அமலனாதிபிரான்

927 - 936

7

மதுரகவிகள்

கண்ணிநுண்சிருத்தாம்பு

937 - 947

8

திருமங்கை ஆழ்வார்

பெரியதிருமொழி

948 - 2031

 

Ditto

திருக்குறுந்தாண்டகம்

2032 - 2051

 

Ditto

திருநெடுந்தாண்டகம்

2052 - 2081

9

பொய்கை ஆழ்வார்

முதல் திருவந்தாதி

2082 - 2181

10

பூதத்தாழ்வார்

இரண்டாம் திருவந்தாதி

2182 - 2287

11

பேயாழ்வார்

மூன்றாம் திருவந்தாதி

2288 - 2381

12

திருமழிசை ஆழ்வார்

நான்முகன் திருவந்தாதி

2382 - 2477

13

நம்மாழ்வார்

திருவிருத்தம்

2478 - 2577

 

Ditto

திருவாசிரியம்

2578 - 2584

 

Ditto

பெரியதிருவந்தாதி

2585 -2671

14

திருமங்கை ஆழ்வார்

திருஎழுகூற்றிருக்கை

       2672

 

Ditto

சிறிய திருமடல்

2673 - 2710

 

Ditto

பெரிய திருமடல்

2711 - 2790

15

திருவரங்கத்தமுதனார்

இராமாநுசநூற்றந்தாதி

2791 - 2898

16

நமாழ்வார்

திருவாய்மொழி

2899 - 4000

 

Tamil author, Periazhvar. Translation: Srirama Bharati. 2nd Translation: Kausalya Hart
Tamil text and
Dr. Hart's translation from Madurai project
 
 1. Live for zillions of years.
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா. உன்
செவ்வடிசெவ்வி திருக்காப்பு. 1.1.1

Many years, many years, many thousands of years and many hundred thousands more. Gem-hued Lord with mighty wrestling shoulders, your red lotus feet are our refuge. 1 (Srirama Bharati)

1. Let us praise the god and say, “Pallandu! Pallanmdu!”
You conquered your enemies with your strong arms.
You have the color of the blue sapphire.
We praise you forever, forever and forever
and for many crores of years.
Protect us as we are beneath your divine feet.1
Kausalya Hart

 


Allegiance to You, Your Consort, Discus and Conch.

2. அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம்பல்லாண்டு
வடிவாய் நின் வலமார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு
வடிவார் சோதி வலத்துறையும் சுடர் ஆழியும் பல்லாண்டு
படைபோர் புக்கு முழங்கும் அப் பாஞ்சசன்னியமும் பல்லாண்டே. (2)

I worship everyday (the Alvars) Bhutam, Saras (Poykai), Mahadahvaya (Pey), Bhattanatha (Perivalvar), Sri (Andal), Bhaktisara (Tirumalisai Alvar), Kulasekara, Yogivahana (Tiruppanalvar), Bhaktanghrirenu (Tondaradippodi), Parakala (Tirumangai Alvar), Yatindra Misra (Sri Ramanuja) and Srimat-Parankusa - Muni (Madurakavi - Satakopan Nathamuni trio.) 2  Srirama Bharati

2. Let us praise the god and say, “Pallaṇḍu! Pallaṇḍu!”
Let us live never apart from your devotees and you.
Let us praise you.
Let us praise the beautiful Lakshmi
who lives on the right side of your strong chest.
Let us praise the beautiful shining discus
that you carry in your right hand.
Let us praise the Panchajanyam conch
that you blow on the battlefield.  Kausalya Hart

3: Come and get Prasadam.

3. வாழாட்பட்டு நின்றீருள்ளீரேல் வந்து மண்ணும் மணமும் கொண்மின்
கூழாட்பட்டு நின்றீர்களை எங்கள் குழுவினில் புகுதலொட்டோம்;
ஏழாட்காலும் பழிப்பிலோம் நாங்கள் இராக்கதர் வாழ் இலங்கை
பாழாளாகப் படைபொருதானுக்குப் பல்லாண்டு கூறுதமே. 1.1.3

You that stand and suffer life, come! Accept talc paste and fragrances. We shall not admit into our fold those who are slaves of the palate. For seven generations, pure hearted, we have sung the praises of Kodanda Rama who launched an army and destroyed Lanka, the demon's haunt. 3  Srirama Bharati

3. Let us praise the god and say, “Pallaṇḍu! Pallaṇḍu!”
O devotees, if you wish to serve the god
come and carry sand and fragrance in his festivals.
If you concern yourself only with food,
we will not include you among our devotees.
We are from families
that have not sinned for seven generations.
Let us praise the god who fought and destroyed
the Rakshasas and their land Lanka.  Kausalya Hart

4. Om namo Narayanaya.

ஏடு நிலத்தில் இடுவதன் முன்னம் வந்து எங்கள் குழாம் புகுந்து

கூடு மனம் உடையீர்கள்! வரம்பு ஒழி வந்து ஒல்லைக் கூடுமினோ

நாடும் நகரமும் நன்கு அறிய நமோ நாராயணாய என்று

 பாடு மனம் உடைப் பத்தர் உள்ளீர்! வந்து பல்லாண்டு கூறுமினே.4

Before you place your trust on infirm ground, come! Join us! O, Like-hearted men, give up your temporal aims and join us quickly! Let town and country resound with the chant ‘Namo Narayanaya’. Ye Devotees who wish to sing, come! Join us in singing Pallandu. 4 Srirama Bharati

4. Let us praise the god and say, “Pallaṇḍu! Pallaṇḍu!”.
Come and join us to do service to the god.
If you realize always that your soul is god
there is nothing you need to think of to go to him.
Praise, singing, “Namo, Narayaṇa!”
in all towns and in all countries.
O devotees, come and praise the god with us.  Kausalya Hart

 

5. அண்டக் குலத்துக்கு அதிபதி ஆகி, அசுரர் இராக்கதரை

இண்டக் குலத்தை எடுத்துக் களைந்த இருடீகேசன் தனக்கு

தொண்டக் குலத்தில் உள்ளீர்! வந்து அடி தொழுது ஆயிரம் நாமம் சொல்லிப்

பண்டைக் குலத்தைத் தவிர்ந்து பல்லாண்டு பல்லாயிரத்து ஆண்டு என்மினே. 5 (5)

Asserting his supremacy over all creation, as Hrikea, he destroyed the clannish Asuras and Rakshasas. O Devotees, revere his feet, chanting the thousand names. Give up your old connections and ways and sing ‘Many thousands of years, Pallandu’. 5  Srirama Bharati

5. Let us praise the god and say, “Pallaṇḍu! Pallaṇḍu!”
O devotees,
worship and praise Rishikesa, the king of the whole earth.
He destroyed the Rakshasas and their large clan.
Give up your old ways and join us
and recite the thousand names of the god.
Bow to his feet and say, “Pallaṇḍu! Pallaṇḍu!”  Kausalya Hart

6. எந்தை தந்தை தந்தை தந்தை தம் மூத்தப்பன் ஏழ்படிகால் தொடங்கி

வந்து வழிவழி ஆட்செய்கின்றோம் திருவோணத் திருவிழவில்

அந்தியம் போதில் அரியுரு ஆகி அரியை அழித்தவனைப்

பந்தனை தீரப் பல்லாண்டு பல்லாயிரத்து ஆண்டு என்று பாடுதுமே.

My father’s father’s father’s father and his grandfather before him, over seven generations have performed service to the lord. In the asterism of Sravanam, at dusk, the lord came as the man-lion and tore apart the foe. End your suffering, join us! Sing ‘Many years, many thousands of years Pallandu’ 6  Srirama Bharati

6. Let us praise the god and say, “Pallaṇḍu! Pallaṇḍu!”.
My father, his father and his grandfather,
for seven generations they all worshipped him
and served him.
He took the form of Narasimha
on the evening of Sravaṇa Nakshatram day
and destroyed Hiraṇyan.  Kausalya Hart

7. தீயிற் பொலிகின்ற செஞ்சுடர் ஆழி திகழ் திருச் சக்கரத்தின்

கோயிற் பொறியாலே ஒற்றுண்டு நின்று குடிகுடி ஆட்செய்கின்றோம்

மாயப் பொருபடை வாணனை ஆயிரம் தோளும் பொழி குருதி

பாயச் சுழற்றிய ஆழி வல்லானுக்குப் பல்லாண்டு கூறுதுமே. 7

Branded with the shape of the radiant discus blazing with the brilliance of fire we stand and serve, generation after generation. For him who swirled the discus over Bana — who was waging a war of illusion, — and made his thousand shoulders bleed, we sing Pallandu. 7  Srirama Bharati

7. Let us praise the god and say, “Pallaṇḍu! Pallaṇḍu!”
We brand our shoulders
with the famous divine discus that shines like fire.
We join the temple and serve the god for many generations.
The strong god fought with Baṇasuran
who had a thousand arms and a magical army
and destroyed him with his discus
making all his thousand arms bleed.
Let us praise that strong god and say, “Pallaṇḍu! Pallaṇḍu!”  Kausalya Hart

8. நெய்யிடை நல்லதோர் சோறும் நியதமும் அத்தாணிச் சேவகமும்

கையடைக் காயும் கழுத்துக்குப் பூணொடு காதுக்குக் குண்டலமும்

மெய்யிட நல்லதோர் சாந்தமும் தந்து, என்னை வெள்ளுயிர் ஆக்கவல்ல

பையுடை நாகப் பகைக் கொடியானுக்குப் பல்லாண்டு கூறுவனே. 8

The lord gives me good rice food with Ghee, and privileges of attendance. Betel leaf and Arecanut, ornaments for the neck and ears and fragrant Sandal paste to smear. He purges my soul. He has the Garuda bird,— foe of the hooded snakes, — on his banner; for him I sing Pallandu. 8  Srirama Bharati

8. Let us praise the god and say, “Pallaṇḍu Pallaṇḍu!".
O divine god,
you gave me prasadam with good ghee,
betel leaves and nuts, ornaments for my neck,
earrings to decorate my ears,
and sandal paste to smear on my body.
You gave me your grace
so that I would become pure and wise and serve you.
Let me praise the god who holds the Garuḍa banner
and say, “Pallaṇḍu! Pallaṇḍu!”  Kausalya Hart

9. உடுத்துக் களைந்த நின் பீதகஆடை உடுத்துக் கலத்தது உண்டு

தொடுத்த துழாய் மலர் சூடிக் களைந்தன சூடும் இத் தொண்டர்களோம்

விடுத்த திசைக் கருமம் திருத்தித் திருவோணத் திருவிழவில்

படுத்த பைந் நாகணைப் பள்ளி கொண்டானுக்குப் பல்லாண்டு கூறுதுமே. 9 

O Lord reclining on the hooded snake, we wear the yellow vestment, you wear and discard. We eat the food offered to you. We wear the woven Tulasi flowers you wear and discard, and rejoice. Keeping watch over the ways of the world, you appeared in the asterism of Sravanam. To you we sing Pallandu. 9  Srirama Bharati

9. Let us praise the god and say, “Pallaṇḍu Pallaṇḍu!” 
We are your devotees.
We wear the silk clothes that you have worn.
We put on the Thulasi garland that adorned you.
We eat the food that is left over after you have eaten.
We do the services that you want us to do everywhere.
On the day of Sravaṇa festival,
we praise the god who sleeps on the snake bed
and say, “Pallaṇḍu! Pallaṇḍu!”  Kausalya Hart

 

10. எந்நாள் எம்பெருமான் உன் தனக்கு அடியோம் என்று எழுத்துப்பட்ட

அந்நாளே அடியோங்கள் அடிக்குடில் வீடுபெற்று உய்ந்தது காண்

செந்நாள் தோற்றித் திருமதுரையிற் சிலை குனித்து ஐந்தலைய

பைந்நாகத் தலைப் பாய்ந்தவனே! உன்னைப் பல்லாண்டு கூறுதுமே. 10 10

My Lord! The day we became your bonded serfs, that very day our

entire clan found its refuge and salvation, see! You appeared on that auspicious day in Mathura city, destroyed Kamsa’s arsenal and danced on the head of the five-hooded snake, Pallandu to you. 10  Srirama Bharati

10. Let us praise the god and say, “Pallaṇḍu Pallaṇḍu!”
From the morning of each day we serve you as your slaves
and we will do the same in all our lives and in future generations.
Release us from birth and give us moksha.
You were born on auspicious Sravaṇa day.
You broke the bow of Kamsan in northern Madhura,
and danced on Kalingan the five-headed snake.
Let us praise and say, “Pallaṇḍu, Pallaṇḍu!”  Kausalya Hart

 

11. அல்வழக்கு ஒன்றும் இல்லா அணிகோட்டியர் கோன் அபிமான துங்கன்

செல்வனைப் போலத், திருமாலே! நானும் உனக்குப் பழ அடியேன்

நல்வகையால் நமோ நாராயணா என்று நாமம் பல பரவி

பல் வகையாலும் பவித்திரனே! உன்னைப் பல்லாண்டு கூறுவனே. 11

My lord Tirumal! Like the faultless chief of Kottiyur Selvanambi, a mountain of respectability, I am an old faithful servant of yours. Chanting Namo Narayana and other names in myriad ways with all my power, O Pure One, I sing Pallandu to you. 11  Srirama Bharati

11. Let us praise the god and say, “Pallaṇḍu! Pallaṇḍu!”
Dearest god, I am an old devotee of yours,
like Abhimanadungan, the king of beautiful Koṭṭiyur
where there is no injustice.
You are pure in all ways.
Devotees praise you with many names and say,
“Namo Narayaṇa” with love.
I will praise you and say, “Pallaṇḍu Pallaṇḍu”  Kausalya Hart

12. பல்லாண்டு என்று பவித்திரனைப் பர மேட்டியை சார்ங்கம் என்னும்

வில் ஆண்டான் தன்னை வில்லிபுத்தூர் விட்டு சித்தன் விரும்பிய சொல்

நல் ஆண்டு என்று நவின்று உரைப்பார் நமோ நாராயணாய என்று 

பல்லாண்டும் பரமாத்மனைச் சூழ்ந்திருந்து ஏத்துவர் பல்லாண்டே.  12

These words were uttered with love by Villiputtur’s Vishnuchitta, wishing ‘Pallandu’ for the pure lord, the large-hearted one, wielder of the Sarnga bow. Those who enjoy singing this and surround the lord at all times chanting ‘Namo Narayanaya’, for them too, this good year, Pallandu. 12  Srirama Bharati

12. Vishṇuchithan of Villiputhur praised the highest god,
the pure god who carries the bow Sarngam.
Those who recite these poems and worship the god
saying, “Namo Narayaṇa”
will be with the highest god, praising him always
and saying, “Pallaṇḍu! Pallaṇḍu!”  Kausalya Hart

13. முதல் திருமொழி வண்ண மாடங்கள் (13-22) கண்ணன் திருவவதாரச் சிறப்பு

வண்ண மாடங்கள் சூழ் திருக்கோட்டியூர்

கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில்

எண்ணெய் சுண்ணம் எதிரெதிர் தூவிடக்

கண்ணன்முற்றம் கலந்து அளறு ஆயிற்றே. 13

When the lord Sri Krishna Kesava was born in Tirukkottiyur of beautiful mansions they spilled oil and turmeric powder on one another, slushing the portico of Krishna’s house.    13  Srirama Bharati

13. Kaṇṇan, Kesavan, the lovely child,
was born in Thirukkoṭṭiyur
filled with beautiful palaces.
When the cowherds sprinkled oil
and turmeric powder mixed with fragrance
on each other in front of Kaṇṇan’s house
they made the front yards of the houses muddy.
  Kausalya Hart

1.2. The Birth of Sri Krishna

14. Vanna Madangal \ Mohana \ Rupakam

 

ஓடுவார், விழுவார், உகந்து, ஆலிப்பார்

நாடுவார், நம்பிரான் எங்குத்தான் என்பார்

பாடுவார்களும் பல்பறை கொட்ட நின்று

ஆடுவார்களும் ஆயிற்று ஆய்ப்பாடியே. 14  

They ran and fell, then rose and greeted joyously, asking, “Where is our lord?” Singers, dancers and drummers everywhere thronged the cowherds’ hamlet.   14  Srirama Bharati

14. When cowherds heard that the divine child was born,
they ran, fell and shouted in joy.
They searched for the baby and asked everyone,
“Where is our dear one?”
They beat the drums, sang, danced
and joy spread everywhere in their village.  Kausalya Hart

15. பேணிச் சீர் உடைப் பிள்ளை பிறந்தினில்
காணத் தாம் புகுவார் புக்குப் போதுவார்
ஆண் ஒப்பார் இவன் நேர் இல்லை காண் திரு-
வோணத்தான் உலகு ஆளும் என்பார்களே (15)

Soon after the protected child was born, they poured into the nursery to see him, and came out saying, “He has no match!", “He shall rule the Earth!", “Tiruvonam is his star! 15  Srirama Bharati

15. When the glorious child was born
the cowherds entered with love into Yashoda’s house,
saw him and praised him, saying,
“See! Among all men there is no equal to this child.
He was born under the Thiruvoṇam star
and will rule the world.”  Kausalya Hart

16. உறியை முற்றத்து உருட்டி நின்று ஆடுவார்
நறுநெய் பால் தயிர் நன்றாகத் தூவுவார்
செறி மென் கூந்தல் அவிழத் திளைத்து எங்கும்
அறிவு அழிந்தனர் ஆய்ப்பாடி ஆயரே 16

The cowherd-folk poured out good milk, curds and Ghee from the rope-shelf, overturned the empty pots in the portico and danced on them tossing their disheveled hair, and lost their minds. 16  Srirama Bharati

16. The women of the cowherd village
took the pots from the uri (rope-self),
rolled them in front of their houses and danced.
The fragrant ghee, milk and yogurt spilled all over
and they became crazy with joy
and their thick, soft hair became loose.  Kausalya Hart

17. கொண்ட தாள் உறி கோலக் கொடுமழுத்
தண்டினர் பறியோலைச் சயனத்தர்
விண்ட முல்லையரும்பு அன்ன பல்லினர்
அண்டர் மிண்டிப் புகுந்து நெய்யாடினார் (17)

17. Forest-dwellers came pouring in, with teeth as white as the fresh Mullai blossom, wearing woven bark cloth, carrying a staff, an axe, and a sleeping mat woven from screw pine fiber; they smeared themselves with Ghee and danced. 17  Srirama Bharati

17. When the cowherds who carry the uri,
sharp mazhu (axe) weapons, staffs for grazing the cows
and who have palm-leaf beds to sleep on
heard the divine child was born,
they joined happily together
and laughed with their jasmine flower-like teeth.
They smeared oil on themselves
and jumped into the water to bathe.  Kausalya Hart

18. கையும் காலும் நிமிர்த்துக் கடார நீர்
பைய ஆட்டிப் பசுஞ் சிறு மஞ்சளால்
ஐய நா வழித்தாளுக்கு அங்காந்திட
வையம் ஏழும் கண்டாள் பிள்ளை வாயுளே(18)

18. She washed her child in a bathtub gently stretching his arms and legs. Then she opened his month to clean the longue with a piece of tender turmeric and saw the seven worlds in his gaping mouth. 18  Srirama Bharati

18. The cowherdess Yashoda massaged
the baby’s hands and legs
and gently poured fresh turmeric water on his body
from the pot and bathed him.
When she cleaned his lovely tongue,
he opened his mouth
and she saw all the seven worlds inside.  Kausalya Hart

19. வாயுள் வையகம் கண்ட மடநல்லார்
ஆயர் புத்திரன் அல்லன் அருந்தெய்வம்
பாய சீர் உடைப் பண்பு உடைப் பாலகன்
மாயன் என்று மகிழ்ந்தனர் மாதரே (19)

19. When the other good ladies saw the Universe in his mouth, they exclaimed with glee, “this is no ordinary cowherd-child, but the blessed lord himself, endowed with all the auspicious qualities”. Srirama Bharati

19. The beautiful cowherd women
who saw the worlds in his mouth
wondered and praised him,
“This is no cowherd child.
He is the supreme god.
This wonderful child is really a Maayan!”   Kausalya Hart

20. பத்து நாளும் கடந்த இரண்டாம் நாள்
எத் திசையும் சயமரம் கோடித்து
மத்த மா மலை தாங்கிய மைந்தனை
உத்தானம் செய்து உகந்தனர் ஆயரே (20)

After ten days and two, the cowherds erected festooned pillars on all four sides then lifted the child from the cradle, singing “The-prince-who- lifted-the-wild elephants-mountain- against-a-hailstorm! (Srirama Bharati)Srirama Bharati

20. The cowherds planted poles of victory
in all directions on the twelfth day after the child was born
and gave him a name of the god
who lifted up the huge Govardhana mountain.
They carried him in their arms and rejoiced
.   Kausalya Hart

21. கிடக்கில் தொட்டில் கிழிய உதைத்திடும்
எடுத்துக் கொள்ளில் மருங்கை இறுத்திடும்
ஒடுக்கிப் புல்கில் உதரத்தே பாய்ந்திடும்
மிடுக்கு இலாமையால் நான் மெலிந்தேன் நங்காய 21

Lay him in the cradle, and he kicks like it would break; take him to the waist, and he clings like a wrench; hold him in front and he trounces the belly. I can bear it no more. Ladies, I am exhausted!   Srirama Bharati

21. Yashoda said, “If I put him in the cradle,
he will kick and tear the cloth of the cradle.
If I take him in my hands, he will hurt my waist.
If I embrace him tightly, he will kick my stomach.
I don’t have strength anymore to deal with him.
I am tired, my friends!”  Kausalya Hart

22. செந்நெல் ஆர் வயல் சூழ் திருக்கோட்டியூர்
மன்னு நாரணன் நம்பி பிறந்தமை
மின்னு நூல் விட்டுசித்தன் விரித்த இப்
பன்னு பாடல் வல்லார்க்கு இல்லை பாவமே 22

These sweet songs of Vishnuchitta who wears the bright Vedic thread speak of the birth of the eternal Lord Narayana in famed Tirukkottiyur, surrounded by fertile paddy fields. Those who master it will gather no sin. 22  Srirama Bharati

22. Vishṇuchithan who wore a shining sacred thread
composed the poems that describe
the birth of omnipresent Narayaṇan, Purushothaman
in Thirukkoṭṭiyur, surrounded with flourishing paddy fields.
All the sins of the devotees
who recite these poems will go away.  Kausalya Hart