Divyaprabhandam contents, verse numbers and Tamil- English Translation

  Name of author Works verses
1 பெரியாழ்வார் திருப்பல்லண்டு 1
  Ditto திருமொழி 13 - 215
2 ஆண்டாள் திருப்பாவை 216 - 504
  Ditto நாச்சியார் 505 - 646
3 குலசேகரர் பெருமாள் திருமொழி 647 - 751
4 திருமழிசைப்பிரான் திருச்சந்தவிருத்தம் 752 - 871
5 தொண்டரடிப்பொடிகள் திருமலை 872 - 916
  Ditto திருப்பள்ளி எழுச்சி 917 - 926
6 திருபாணாழ்வார் அமலனாதிபிரான் 927 - 936
7 மதுரகவிகள் கண்ணிநுண்சிருத்தாம்பு 937 - 947
8 திருமங்கை ஆழ்வார் பெரியதிருமொழி 948 - 2031
  Ditto திருக்குறுந்தாண்டகம் 2032 - 2051
  Ditto திருநெடுந்தாண்டகம் 2052 - 2081
9 பொய்கை ஆழ்வார் முதல் திருவந்தாதி 2082 - 2181
10 பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதி 2182 - 2287
11 பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி 2288 - 2381
12 திருமழிசை ஆழ்வார் நான்முகன் திருவந்தாதி 2382 - 2477
13 நம்மாழ்வார் திருவிருத்தம் 2478 - 2577
  Ditto திருவாசிரியம் 2578 - 2584
  Ditto பெரியதிருவந்தாதி 2585 -2671
14 திருமங்கை ஆழ்வார் திருஎழுகூற்றிருக்கை        2672
  Ditto சிறிய திருமடல் 2673 - 2710
  Ditto பெரிய திருமடல் 2711 - 2790
15 திருவரங்கத்தமுதனார் இராமாநுசநூற்றந்தாதி 2791 - 2898
16 நமாழ்வார் திருவாய்மொழி 2899 - 4000

Translation: Veeraswamy Krishnaraj

 

            Tamil Text from Madurai Project and Jagathratsakan

Madurai Etext 2791 =  2899   The numerical series of verses is different from that of JagathRaksakan

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் (பாடல்கள் 1- 473)


திருப்பல்லாண்டு பெரியாழ்வார் திருமொழிகளின் தனியன்கள்
நாதமுனிகள் அருளிச் செய்தது.

Periyalvar Tirumozi
Invocation. Praise to Vishnu Chittar.

குருமுகம் அநதீத்ய ப்ராக வேதான் அசேஷான்
நரபதி பரிக்ல்ப்தம் சுல்கம் ஆதாது காம
ச்வசுரம் அமர வந்த்யம் ரங்கனாதஸ்ய சாக்ஷாத்
த்விஜ குலதிலகம் தம் விஷ்ணு சித்தம் நமாமி.

Praise to Vishnu Chittar, the most eminent among the twice-born Brahmanas, who through Andal became the father-in-law of Ranganathar, and was a learned exponent of Vedas without the tutelage of Gurus.
Praise to Perialvar.
மின்னார் தடமதிள் சூழ் வில்லிபுத்தூர் என்று ஒருகால்
சொன்னார் கழற்கமலம் சூடினோம் - முன்னாள்
கிழியறுத்தான் என்றுரைத்தோம், கீழ்மையினிற்சேரும்
வழியறுத்தோம் நெஞ்சமே வந்து.

Praise to Perialvar of  Sri Villiputtur by whose legend we give up our degenerate ways.
King Pandiyan celebrates arrival of Perialvar.
பாண்டியன் கொண்டாடப் பட்டர்பிரான் வந்தானென்று
ஈண்டிய சங்கம் எடுத்தூத - வேண்டிய
வேதங்கள் ஓதி விரைந்து கிழியறுத்தான்
பாதங்கள் யாமுடைய பற்று.

     King Pandiyan celebrated the arrival of Pattarpiran who earning the name Periyalvar, explicated the Vedas and earned his prize.        May his feet be ours in affection.    

பெரியாழ்வார் திருவடிகளே சரணம்.

Surrender at the feet of Perialzvar.

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
Sri: Srimathe Ramanujaya namah.
 

பெரியாழ்வார் அருளிச்செய்த திருப்பல்லாண்டு

Tiruppalandu as presented by Perialvar.

காப்பு  Invocation
குறள்வெண்செந்துறை
1.1-
1: Live for zillions of years.
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா. உன்
செவ்வடிசெவ்விதிருக்காப்பு. 1.1.1

(May you live and flourish for) a zillion years, O gem-colored Lord with mighty and brawny shoulders and red lotus feet to which we seek refuge.
2: Allegiance to You, Your Consort, Discus and Conch.
அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம்பல்லாண்டு
வடிவாய் நின் வலமார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு
வடிவார் சோதி வலத்துறையும் சுடர் ஆழியும் பல்லாண்டு
படைபோர் புக்கு முழங்கும் அப் பாஞ்சசன்னியமும் பல்லாண்டே. (2)
Zillion years of inseparable link between You and we the slaves of yours, to your consort residing on your chest, the splendorous discus and the Panchajanaya conch. 1.1.2
3: Come and get Prasadam.
வாழாட்பட்டு நின்றீருள்ளீரேல் வந்து மண்ணும் மணமும் கொண்மின்
கூழாட்பட்டு நின்றீர்களை எங்கள் குழுவினில் புகுதலொட்டோ ம்;
ஏழாட்காலும் பழிப்பிலோம் நாங்கள் இராக்கதர் வாழ்இலங்கை
பாழாளாகப் படைபொருதானுக்குப் பல்லாண்டு கூறுதமே. 1.1.3
You, the sufferers in life. Come and get the sacred earth and fragrance. We deny entry to the epicures in our midst. We are pure of sins for seven generations. pallāṇṭu (Zillion years) to the destroyer of Lanka, the abode of demons (and Ravana). 1.1.3
4: Om namo Narayanaya.
ஏடுநிலத்தில் இடுவதன் முன்னம் வந்து எங்கள் குழாம் புகுந்து
கூடு மனமுடையீர்கள் வரம் பொழிவந்து ஒல்லைக்கூடுமினோ
நாடும் நகரமும் நன்கறிய நமோநாராயணாய வென்று
பாடுமனமுடைப் பத்தருள்ளீர். வந்து பல்லாண்டு கூறுமினே. 1.1.4
Before you are interred into the burial ground, join our group, O the like-minded, to enjoy the bliss. Let the town and country resound with the sound of Namo Narayanaya, O the devotees with the penchant to sing (His glory). Come and sing the pallāṇṭu. 1.1.4
5:  Worship the feet of Bhagavan.
அண்டக் குலத்துக் கதிபதியாகி அசுரர் இராக்கதரை
இண்டைக் குலத்தை எடுத்துக்களைந்த இருடீகேசன் தனக்கு
தொண்டக்குலத்தில் உள்ளீர். வந்தடிதொழுது ஆயிர நாமம் சொல்லி
பண்டைக் குலத்தைத் தவிர்ந்து பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு என்மினே. 1.1.5.
Irudikesan (Hrsikesa =
हृषीकेश = hṛṣīkeśa. (having his hair erect), ep. of 
Viṣṇu-Kṛṣṇa) became the Lord of the Universe and eradicated the Asuras and Raksasas, thick as a dense brush. O Devotee-slaves of the Lord, come and worship His feet and chant His thousand names. Give up the hubris of high birth and sing Pallāṇṭu. 1.1.5

6: Man-Lion Avatar of the Lord.
எந்தை தந்தை தந்தை தந்தை தம் மூத்தப்பன் ஏழ்படிகால் தொடங்கி
வந்து வழிவழி ஆட்செய்கின்றோம்; திருவோணத் திருவிழவில்
அந்தியம் போதில் அரியுரு வாகி அரியை அழித்தவனை
பந்தனை தீரப் பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு என்று பாடுதமே
. 6.
My father, his fathers father and grandfather before him, well over seven generations rendered service to Bhagavan. In Asterism of Sravanam, at dusk, He took the form of Man-Lion and destroyed the enemy. To expiate and obtain release from  the bondage (sin of murder), let us sing pallāṇṭu
Pallayiraththāndu. (அரி = ari = enemy; lion.) 1.1.6
7: Pallandu to the valorous Lord.
தீயிற் பொலிகின்ற செஞ்சுடர் ஆழி திகழ் திருச்சக்கரத்தின்
கோயிற் பொறியாலே ஒற்றுண்டு நின்று குடிகுடி ஆட்செய்கின்றோம்
மாயப் பொருபடை வாணனை ஆயிரந்தோளும் பொழி குருதி
பாயச் சுழற்றிய ஆழி வல்லானுக்குப் பல்லாண்டு கூறுதுமே. 7.
We are branded with the radiant fiery sacred discus and serve Bhagavan over many generations. He deployed His discus on illusory
Vāṇan, ripped his thousand shoulders wherefrom the blood ran (like a river). To that Discus Wielder, let us chant pallāṇṭu. 1.1.7
8: Pallandu to the munificent Lord.
நெய்யிடை நல்லதோர் சோறும் நியதமும் அத்தாணிச் சேவகமும்
கை அடைக்காயும் கழுத்துக்குப் பூணொடு காதுக்குக் குண்டலமும்
மெய்யிட நல்லதோர் சாந்தமும் தந்து என்னை வெள்ளுயிர் ஆக்கவல்ல
பையுடை நாகப்பகைக் கொடியானுக்குப் பல்லாண்டு கூறுவனே. 8.
Bhagavan bestows on me, Butter-rice, the opportunity to do service, Pan-supari, ornaments for the neck and ears, and Sandalwood paste to smear. Bhagavan, whose banner is Garuda, which kills the enemy-snakes, ensures good conduct in me. To that flag-holder, I sing Pallandu. 1.1.8
9: We the Devotee-Slaves enjoy using your leftovers and discards.
உடுத்துக் களைந்த நின் பீதக ஆடை யுடுத்துக் கலத்ததுண்டு
தொடுத்த துழாய்மலர் சூடிக் களைந்தன சூடுமித் தொண்டர்களோம்
விடுத்த திசைக்கருமம் திருத்தித் திருவோணத் திருவிழவில்
படுத்த பைந் நாகணைப் பள்ளி கொண்டானுக்குப் பல்லாண்டு கூறுதுமே. 9.

O Lord, we wear your discarded yellow clothes, eat the food left over after offerings to you, and rejoice ourselves by wearing Tulsi (Sacred basil) garlands worn and discarded by you. We the toṇṭars (Devotee-Slaves) chant Pallandu on the sacred day of Tiruvonam, as You  rest on the coils of the five-hooded snake. 1.1.9
10: We the vassals and servitors attain liberation through your grace.
எந்நாள் எம்பெருமான் உன்தனக்கு அடியோமென்று எழுத்துப்பட்ட
அந்நாளே அடியோங்கள் அடிக்குடில் வீடுபெற்று உய்ந்தது காண்
செந்நாள் தோற்றித் திருமதுரையுள் சிலை குனித்து  ஐந்தலைய
பைந்நாகத்தலை பாய்ந்தவனே. உன்னைப் பல்லாண்டு கூறுதுமே. 10.
The day, Emperuman declared us His vassals, is the very day we the servitors at your feet through generations past attained liberation. On the auspicious day of Tiruvonam, You made an appearance in the sacred city of Mathura, destroyed the arsenal (of Kamsa) and danced on the five-hooded snake (named Kalia). I chant the Pallandu. 1.1.10
11: Namo Narayana
அல்வழக்கு ஒன்றுமில்லா அணிகோட்டியர் கோன் அபிமானதுங்கன்
செல்வனைப் போல திருமாலே. நானும் உனக்குப் பழவடியேன்
நல்வகையால் நமோ நாராயணா வென்று நாமம் பல பரவி
பல்வகையாலும் பவித்திரனே. உன்னைப் பல்லாண்டு கூறுவனே.  11.
 O Tirumal, I am your servitor from yore like the faultless Kottiyur Selva Nambi. To cultivate a mind of desirelessness, I chant your many names like Namo Narayana. O the Pure, I chant Pallandu. 1.1.11

12: We the servitors sing your praise.
பல்லாண்டென்று பவித்திரனைப் பரமேட்டியை சார்ங்கம் என்னும்
வில்லாண்டான் தன்னை வில்லிபுத்தூர் விட்டு சித்தன் விரும்பிய சொல்
நல்லாண்டென்று நவின்றுரைப்பார் நமோநாராயணாய வென்று
பல்லாண்டும் பரமாத்மனைச் சூழ்ந்திருந்து ஏத்துவர் பல்லாண்டே.  12.
 The Pallandu-fame pure One is the Wielder of Sarangam bow. Villiputtur Chittan spoke these sweet words with love, saying this was a good year for them too. The servitors, singing and chanting Namo Narayanaya surround and praise the Paramatman and chant Pallandu. 1.1.12

பெரியாழ்வார் திருமொழி Periazvar sacred words.

முதற்பத்து = First ten verses
முதல் திருமொழி - வண்ண மாடங்கள்
(கண்ணன் திருவவதாரச் சிறப்பு)
(Krishnas Avatar and its merit)
கலிவிருத்தம்

13: Bhagavan Krishnas Birth
வண்ணமாடங்கள் சூழ் திருக்கோட்டியூர்
கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில்
எண்ணெய் சுண்ணம் எதிரெதிர் தூவிடக்
கண்ணன்முற்றம் கலந்து அளறு ஆயிற்றே. 1.2.1
Kannan-Kesavan-Nampis (Nampi = God) birth in Tirukkottiyur replete with resplendent mansions prompted people to splash fragrant oils and turmeric powder on each other causing a mire in Krishnas mansion. 1.2.1

14: Musical Revelry by the cowherds.
ஓடுவார் விழுவார் உகந்து ஆலிப்பார்
நாடுவார் நம்பிரான் எங்குத்தான் என்பார்
பாடுவார்களும் பல்பறை கொட்ட நின்று
ஆடுவார்களும் ஆயிற்று ஆய்ப்பாடியே. 2.

They ran, they fell, they rose and they embraced each other in joy. They asked where Nampiran (நம்பிரான் = Nampirāṉ = Lord, god) was. Singers singing, drummers beating many kinds of drums and dancers dancing to the music assembled in the cowherds hamlet (ஆய்ப்பாடி āy-p-pāṭi). 1.2.2

15: The cowherds obtain Dharsan of Divine Baby.
பேணிச் சீர் உடைப்பிள்ளை பிறந்தினில்
காணத் தாம் புகுவார் புக்குப் போதுவார்;
ஆண் ஒப்பார் இவன் நேர் இல்லை காண், திரு
வோணத்தான் உலகு ஆளும் என்பார்களே. 3.
To see the famous and guarded newborn, they eagerly entered the hamlet and no sooner they left, they said, 'There is no one manlier than Him.' 'He is the Tiruvonatthan (the One born in Tiruvonam) destined to rule the world.' 1.2.
3

Krishnas birthstar is Thiruvonam. See #22.

#

Sanskrit/Hindi

Tamil name
தமிழ்

Western star name

1 Aśvinī
अश्विनी
Aswini
அஸ்வினி
β and γ Arietis
2 Bharaṇī
भरणी
Baraṇi
பரணி
3539, and 41 Arietis
3 Kṛttikā
कृत्तिका
Kārthikai
கார்த்திகை
Pleiades
4 Rohiṇī
रोहिणी
Rōhiṇi
ரோகிணி
Aldebaran
5 Mṛgaśirṣa
मृगशिर्ष -
Mirugasīridam
மிருகசீரிடம்
λ, φ Orionis
6 Ārdrā
आद्रा
Thiruvādhirai
திருவாதிரை
Betelgeuse
7 Punarvasu
पुनर्वसु
Punarpoosam
புனர்பூசம்
Castor and Pollux
8 Puṣya
पुष्य
Poosam
பூசம்
γδ and θ Cancri
9 Aśleṣā
आश्ळेषा / आश्लेषा
Ayilyam
ஆயில்யம்
δ, ε, η, ρ, and σHydrae
10 Maghā
मघा
Magam
மகம்
Regulus
11 Pūrva or Pūrva Phalguṇī
पूर्व फाल्गुनी
Pooram
பூரம்
δ and θ Leonis
12 Uttara or Uttara Phalguṇī
उत्तर फाल्गुनी
Uthiram
உத்திரம்
Denebola
13 Hasta
हस्त
Astham
அஸ்தம்
αβγδ and ε Corvi
14 Citrā
चित्रा14
Chithirai
சித்திரை
Spica
15 Svāti
स्वाति
Swathi
சுவாதி
Arcturus
16 Viśākha
विशाखा
Visakam
விசாகம்
αβγ and ι Librae
17 Anurādhā
अनुराधा
Anusham
அனுஷம்
βδ and π Scorpionis
18 Jyeṣṭha
ज्येष्ठा
Kettai
கேட்டை
ασ, and τ Scorpionis
19 Mūla
मूल/मूळ
Mūlam
மூலம்
ε, ζ, ηθ, ι, κλμ andν Scorpionis
20 Pūrvāṣāḍha
पूर्वाषाढा
Pūradam
பூராடம்
δ and ε Sagittarii
21 Uttarāṣāḍha
उत्तराषाढा
Uthirādam
உத்திராடம்
ζ and σ Sagittarii
22 Śravaṇa
श्रवण
Tiruvōnam
திருவோணம்
αβ and γ Aquilae
23 Śraviṣṭhā or Dhaniṣṭha
श्रविष्ठा or धनिष्ठा
Aviṭṭam
அவிட்டம்
α to δ Delphinus
24 Śatabhiṣak or Śatatārakā
शतभिषक् / शततारका
Sadayam
சதயம்
γ Aquarii
25 Pūrva Bhādrapadā
पूर्वभाद्रपदा / पूर्वप्रोष्ठपदा
Pūraṭṭādhi
பூரட்டாதி
α and β Pegasi
26 Uttara Bhādrapadā
उत्तरभाद्रपदा / उत्तरप्रोष्ठपदा
Uttṛṭṭādhi
உத்திரட்டாதி
γ Pegasi and αAndromedae
27 Revatī
रेवती
Rēvathi
ரேவதி
ζ Piscium


16: The cowherds empty the dairy products in celebration and go mad with happiness.
உறியை முற்றத்து உருட்டி நின்று ஆடுவார்
நறுநெய் பால் தயிர் நன்றாகத் தூவுவார்
செறி மென் கூந்தல் அவிழத் திளைத்து எங்கும்
அறிவு அழிந்தனர் ஆய்ப்பாடி ஆயரே. 4.

They (the cowherd) splashed the good ghee, milk and curds from their rope-suspended pots in the inner yard, rolled the empty pots and danced. They (the womenfolk) loosened their hair, threw them (to the wind) and lost their minds. 1.2.4

17: They came in droves carrying accouterments and sporting rows of Jasmine-like teeth.
கொண்ட தாள் உறி கோலக் கொடுமழுத்
தண்டினர், பறியோலைச் சயனத்தர்
விண்ட முல்லையரும்பு அன்ன பல்லினர்
அண்டர் மிண்டிப் புகுந்து நெய்யாடினார். 5.
17. They came in droves, carrying the rope-suspended pots, sturdy shafts with sharp axes, sleeping mats...The cowherd womenfolk sporting  rows of white teeth resembling jasmine buds jostled each other (to see the baby) and smeared each other with clarified butter. 1.2.5

18: Yasoda while bathing Kannan saw the seven worlds in His open mouth.
கையும் காலும் நிமிர்த்துக் கடார நீர்
பைய ஆட்டிப் பசுஞ்சிறு மஞ்சளால்
ஐய நா வழித்தாளுக்கு அங்காந்திட
வையம் ஏழும் கண்டாள் பிள்ளை வாயுளே. 6.
18.  Yasoda bathed Kannan, extended his hands and feet, and pleaded with the child to protrude his tongue to remove the mucus with tender turmeric . She saw all the seven worlds in the child's mouth. 1.2.6

19: The cowherd women declared He was no son of a cowherd but a divine child.
வாயுள் வையகம் கண்ட மடநல்லார்
ஆயர் புத்திரன் அல்லன் அருந்தெய்வம்;
பாய சீர் உடைப் பண்பு உடைப் பாலகன்
மாயன் என்று மகிழ்ந்தனர் மாதரே. 7.
19. The young women, on seeing the Universe, declared, 'He is no cowherd son; He is the Supreme Lord; He is a child with a plethora of auspicious qualities. The womenfolk were rapturous saying He was a Mayan (Illusory). 1.2.7
 

20: Kannan the protector of cowherds from hailstorm by lifting the Govardhana hill.
பத்து நாளும் கடந்த இரண்டாம் நாள்
எத்திசையும் சயமரம் கோடித்து,
மத்த மா மலை தாங்கிய மைந்தனை
உத்தானம் செய்து உகந்தனர் ஆயரே. 8.

உத்தானம் uttāṉam. ut-thānam. Ceremony of bringing out an infant from the lying-in room (the state of being in childbed); confinement. First Infant-outing ceremony.

 On the twelfth day following birth, to celebrate Kannans First Infant-Outing ceremony, the cowherds  built the festooned posts     on all sides. Yasoda (and others) raised the child from the crib, singing He was the one who held the Govardhana Hill harboring the wild elephants to protect the cowherds during hailstorms and ferocious floods. 1.2.8

21: Kannan is too active and his mother is worn out.
கிடக்கில் தொட்டில் கிழிய உதைத்திடும்;
எடுத்துக் கொள்ளில் மருங்கை இறுத்திடும்;
ஒடுக்கிப் புல்கில் உதரத்தே பாய்ந்திடும்
மிடுக்கு இலாமையால் நான் மெலிந்தேன் நங்காய். 9.
As Krishna remains in the crib, he kicks so hard as if to break it. When I pick him up, he flails and breaks my waist. If I hold him close to my chest, he kicks my abdomen. Since he lacks self-control, I am worn out, my dear friend. 1.2.9

22: Vishnu Chittans explicative songs about Narayanas birth will expunge sins.
செந்நெல் ஆர் வயல் சூழ்  திருக்கோட்டியூர்
மன்னு நாரணன் நம்பி பிறந்தமை
மின்னு நூல் விட்டு சித்தன் விரித்த இப்
பன்னு பாடல் வல்லார்க்கு இல்லை பாவமே. (2) 10.
Vishnu Chittan wearing the splendorous thread sang explicative songs of the birth of Narayana in Tirukkottiyur surrounded by golden paddy fields. The devotees who sing these songs will not accumulate sins. 1.2.10

               

இரண்டாம் திருமொழி - சீதக்கடல்
(
கண்ணனது திருமேனியழகைப் பாதாதிகேசாந்தமாக அனுபவித்தல்)

வெண்டளையால் வந்த கலித்தாழிசை

23: See Kannan suck on His toes.
சீதக் கடலுள் அமுது அன்ன தேவகி
கோதைக் குழலாள் அசோதைக்குப் போத்தந்த
பேதைக் குழவி பிடித்துச் சுவைத் உண்ணும்
பாதக் கமலங்கள் காணீரே
பவள வாயீர். வந்து காணீரே. (2) 1.3.1

23. Devaki of cool ambrosial ocean gave to flower-coiffured Yasoda the preverbal infant Kannan , who put his feet in His mouth and sucked on the toes. O Coral-mouthed lasses, come and look at His lotus feet. 1.3.1

24:Damsels, come and see Kannans body and ten toes sporting ornaments.
முத்தும் மணியும் வயிரமும் நன்பொன்னும்
தத்திப் பதித்துத்  தலைப்பெய்தாற்போல் எங்கும்
பத்து விரலும் மணிவண்ணன் பாதங்கள்
ஒத்திட்டிருந்தவா காணீரே
ஒண்ணுதலீர். வந்துகாணீரே. 2.

24. O damsels with bright foreheads! Come and see the gem-colored Kannan's body and feet with ten toes having  pearls, bluestones, diamonds, and gold alternately arranged in an impeccable fashion. 1.3.2

25: O beauteous women, come and see the anklets of Kannan, who sleeps after nursing on Yasoda. 
பணைத்தோள் இள ஆய்ச்சி பால் பாய்ந்த கொங்கை
அணைத்து ஆர உண்டு கிடந்த இப்பிள்ளை
இணைக்காலில் வெள்ளித் தளை நின்று இலங்கும்
கணைக்கால் இருந்தவா காணீரே
காரிகையீர். வந்துகாணீரே. 3.

25. Kannan holding, suckling on the milk-engorged breasts of Young Yasoda with bamboo-like shoulders, and having satiated his hunger has gone to sleep. O beateous women, come and see the silver anklets on his ankles. 1.3.3

 

26: Kannan ate a pot of butter. Infuriated Yasoda raised her hands. In fear he crawled away.
உழந்தாள் நறுநெய் ஓரோர் தடா உண்ண
இழந்தாள் எரிவினால் ஈர்த்து எழில் மத்தின்
பழந் தாம்பால் ஓச்ச பயத்தால் தவழ்ந்தான்
முழந்தாள் இருந்தவா காணீரே
முகிழ் முலையீர். வந்து காணீரே. 4.
26. O girls with budding breasts, Come and see his knees. Kannan alone ate a pot of butter. Infuriated Yasoda pulled him by his hand and raised her hand with a churning pin with attached old rope. In fear, Kannan crawled away on his knees.1.3.4

27: Kannan sucked the life-breath of ogress and killed Hiranyan.
பிறங்கிய பேய்ச்சி முலை சுவைத்து உண்டிட்டு
உறங்குவான் போலே கிடந்த இப் பிள்ளை
மறம் கொள் இரணியன் மார்பை முன் கீண்டான்
குறங்குகளை வந்து காணீரே
குவிமுலையீர். வந்துகாணீரே. 5.
27. O Girls with breast buds, see the  innocent-looking sleeping child in the crib, who nursed eagerly on the (poison-smeared) breasts of ogress Putana impersonating the mother and sucked the life-breath from her. Look at the beautiful thighs of this child, who split open the chest of Hiranyan. 1.3.5
28: Come and look at the beauteous baby tooth of Achutan.
மத்தக் களிற்று வசுதேவர் தம்முடைச்
சித்தம் பிரியாத தேவகி தன் வயிற்றில்
அத்தத்தின் பத்தாம் நாள் தோன்றிய அச்சுதன்
முத்தம் இருந்தவா காணீரே
முகிழ்நகையீர். வந்துகாணீரே. 6.
28. Vasudeva, the owner of rutting elephants, has his devoted mind in Devaki from whose womb Achutan took his birth on the tenth day following Hastam. Come  and see his beauteous front tooth, O girls with budding smiles. 1.3.6

29: Kannan wearing a gold waist cord usurps a toy elephant from a peer.
இருங்கை மதகளிறு ஈர்க்கின்றவனைப்
பருங்கிப் பறித்துக் கொண்டு ஓடும் பரமன்தன்
நெருங்கு பவளமும் நேர்நாணும் முத்தும்
மருங்கும் இருந்தவா காணீரே
வாணுதலீர். வந்து காணீரே. 7.
29. Women with a bright foreheads (வாணுதலீர்), come and see Kannan acting as the Mahout and pulling the elephant doll after usurping it from a playmate and running away. See his beautiful gold waist cord studded with corals and pearls. 1.3.7

இரண்டாம் திருமொழி - சீதக்கடல்
(
கண்ணனது திருமேனியழகைப் பாதாதிகேசாந்தமாக அனுபவித்தல்)

வெண்டளையால் வந்த கலித்தாழிசை

23: See Kannan suck on His toes.
சீதக் கடலுள் அமுது அன்ன தேவகி
கோதைக் குழலாள் அசோதைக்குப் போத்தந்த
பேதைக் குழவி பிடித்துச் சுவைத் உண்ணும்
பாதக் கமலங்கள் காணீரே
பவள வாயீர். வந்து காணீரே. (2) 1.3.1

23. Devaki of cool ambrosial ocean gave to flower-coiffured Yasoda the preverbal infant Kannan , who put his feet in His mouth and sucked on the toes. O Coral-mouthed lasses, come and look at His lotus feet. 1.3.1

24:Damsels, come and see Kannans body and ten toes sporting ornaments.
முத்தும் மணியும் வயிரமும் நன்பொன்னும்
தத்திப் பதித்துத்  தலைப்பெய்தாற்போல் எங்கும்
பத்து விரலும் மணிவண்ணன் பாதங்கள்
ஒத்திட்டிருந்தவா காணீரே
ஒண்ணுதலீர். வந்துகாணீரே. 2.

24. O damsels with bright foreheads! Come and see the gem-colored Kannan's body and feet with ten toes having  pearls, bluestones, diamonds, and gold alternately arranged in an impeccable fashion. 1.3.2

25: O beauteous women, come and see the anklets of Kannan, who sleeps after nursing on Yasoda. 
பணைத்தோள் இள ஆய்ச்சி பால் பாய்ந்த கொங்கை
அணைத்து ஆர உண்டு கிடந்த இப்பிள்ளை
இணைக்காலில் வெள்ளித் தளை நின்று இலங்கும்
கணைக்கால் இருந்தவா காணீரே
காரிகையீர். வந்துகாணீரே. 3.

25. Kannan holding, suckling on the milk-engorged breasts of Young Yasoda with bamboo-like shoulders, and having satiated his hunger has gone to sleep. O beateous women, come and see the silver anklets on his ankles. 1.3.3

 

26: Kannan ate a pot of butter. Infuriated Yasoda raised her hands. In fear he crawled away.
உழந்தாள் நறுநெய் ஓரோர் தடா உண்ண
இழந்தாள் எரிவினால் ஈர்த்து எழில் மத்தின்
பழந் தாம்பால் ஓச்ச பயத்தால் தவழ்ந்தான்
முழந்தாள் இருந்தவா காணீரே
முகிழ் முலையீர். வந்து காணீரே. 4.
26. O girls with budding breasts, Come and see his knees. Kannan alone ate a pot of butter. Infuriated Yasoda pulled him by his hand and raised her hand with a churning pin with attached old rope. In fear, Kannan crawled away on his knees.1.3.4

27: Kannan sucked the life-breath of ogress and killed Hiranyan.
பிறங்கிய பேய்ச்சி முலை சுவைத்து உண்டிட்டு
உறங்குவான் போலே கிடந்த இப் பிள்ளை
மறம் கொள் இரணியன் மார்பை முன் கீண்டான்
குறங்குகளை வந்து காணீரே
குவிமுலையீர். வந்துகாணீரே. 5.
27. O Girls with breast buds, see the  innocent-looking sleeping child in the crib, who nursed eagerly on the (poison-smeared) breasts of ogress Putana impersonating the mother and sucked the life-breath from her. Look at the beautiful thighs of this child, who split open the chest of Hiranyan. 1.3.5
28: Come and look at the beauteous baby tooth of Achutan.
மத்தக் களிற்று வசுதேவர் தம்முடைச்
சித்தம் பிரியாத தேவகி தன் வயிற்றில்
அத்தத்தின் பத்தாம் நாள் தோன்றிய அச்சுதன்
முத்தம் இருந்தவா காணீரே
முகிழ்நகையீர். வந்துகாணீரே. 6.
28. Vasudeva, the owner of rutting elephants, has his devoted mind in Devaki from whose womb Achutan took his birth on the tenth day following Hastam. Come  and see his beauteous front tooth, O girls with budding smiles. 1.3.6

29: Kannan wearing a gold waist cord usurps a toy elephant from a peer.
இருங்கை மதகளிறு ஈர்க்கின்றவனைப்
பருங்கிப் பறித்துக் கொண்டு ஓடும் பரமன்தன்
நெருங்கு பவளமும் நேர்நாணும் முத்தும்
மருங்கும் இருந்தவா காணீரே
வாணுதலீர். வந்து காணீரே. 7.
29. Women with a bright foreheads (வாணுதலீர்), come and see Kannan acting as the Mahout and pulling the elephant doll after usurping it from a playmate and running away. See his beautiful gold waist cord studded with corals and pearls. 1.3.7

 30: Come and look at his beautiful navel.
வந்த மதலைக் குழாத்தை வலிசெய்து
தந்தக் களிறு போல் தானே விளையாடும்
நந்தன் மதலைக்கு நன்றும் அழகிய
உந்தி இருந்தவா காணீரே
ஒளியிழையீர். வந்து காணீரே. 8.
30. I
n the presence of playmates, Kannan shows off his skills at play, maintains his self-importance, like the calf of a tusked elephant and becomes quiescent  before Nandagopan. O damsels wearing fine bright jewels, come and see the beautiful navel of Kannan. 1.3.8


31: Come and look at his stomach.
அதிரும் கடல்நிற வண்ணனை ஆய்ச்சி
மதுர முலை ஊட்டி வஞ்சித்து வைத்துப்
பதறப் படாமே பழந் தாம்பால் ஆர்த்த
உதரம் இருந்தவா காணீரே
ஒளிவளையீர். வந்துகாணீரே. 9.
31. Yasoda nursed Ocean-hued Kannan her sweet milk to satiety, and stealthily without any haste tied down with an old cord his stomach, which, O ladies with splendorous bangles come and look. 1.3.9


32: Krishna broke the two Arjuna trees.
பெருமா உரலிற் பிணிப்புண்டு இருந்து அங்கு
இருமா மருதம் இறுத்த இப் பிள்ளை
குருமா மணிப்பூண் குலாவித் திகழும்
திருமார்பு இருந்தவா காணீரே
சேயிழையீர். வந்துகாணீரே. 10.

Tied down to a huge stone mortar, Kannan (crawled and ) broke the two big Arjuna trees (Terminalia arjuna). O bejeweled  Damsels, come and look at the splendorous chest of this child adorned with blue stone. 1.3.10

Two Asuras (anti-gods) morphing into two Arjuna trees came to kill Krishna, who broke the trees and took the life-sap out of them.